க்ரைம்

முகமது பைசல் மீதான வழக்கு; கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

Malaimurasu Seithigal TV

லட்சத்தீவு எம்.பி முகமது பைசலின் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

மறைந்த மத்திய அமைச்சர் பி.எம்.சையதினின் மருமகன் முகமது சாலியை கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கொல்ல முயற்சித்ததாக தேசியவாத காங்கிரஸ் எம் பி முகமது பைசல் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த கீழமை நீதி மன்றம் முகம்மது பைசலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. 

தொடர்ந்து அவருக்கு சிறைத்தண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து அவருக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டது. 

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் இவ்வழக்கு எதிர் தரப்பினரால் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இவ்விசாரணையில் முகமது பைசலுக்கு வழங்கப்பட்ட விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி கேரள உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அதுவரையிலும் முகம்மது பைசல்  பைசல் எம்.பியாக தொடரலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.