க்ரைம்

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சிக்கிய நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் பணம்!!

Malaimurasu Seithigal TV

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை முடிவில் பல்வேறு நிறுவனங்களில் பல கோடி ரூபாய் வாி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 10 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டாத கறுப்பு பணத்தை மிகப் பெரிய டிராங் பெட்டியில் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

இதையடுத்து, சென்ற வருமான வரித்துறை புலனாய்வு ஆணையர் சுனில் மாத்தூர் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயண சாமி இளமாறன், ஜெகத் ரட்சகனின் மகள் ஸ்ரீனிசா ஆகியோரிடம் தனிதனியாக விசாரணை மேற்கொண்டாா். 

மேலும் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடத்தில் இருந்து 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுர்ந்த 7 வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மகள் ஸ்ரீனிசாவுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கின. 

இதனிடையே சவிதா கல்வி குழுமம் தொடர்பான இடங்களில் மட்டும் 27 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரிதுறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடா்ந்து 5 நாளாக நடைபெற்று வந்த இந்த சோதனை நேற்று இரவு 11 மணியளவில் நிறைவடைந்தன. சோதனை முடிவில் பல்வேறு நிறுவனங்களில் பல கோடி ரூபாய் வாி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றும் வருமானவாித்துறை அதிகாாிகள் சோதனை மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.