மத்தியபிரதேசத்தில் பழங்குடியின தொழிலாளி மீது பாஜக பிரமுகா் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியளித்த நிலையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், வழக்கு பதியப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில், சித்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின நபர் சாலையோரத்தில் அமர்ந்த்திருந்த போது, பிரவேஷ் சுக்லா என்ற நபர், சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சிறுநீர் கழித்த அந்த நபர், பாஜக பிரமுகர் எனவும், இந்த சம்பவம் 3 மாதங்களுக்கு முன்பாகவே நடந்ததாகவும் தெரியவருகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர், இவர் பாஜக பிரமுகர் என்பதால், புகார் அழிக்க பயந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த கொடூர சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அனைவரின் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ' குற்றவாளிக்கு மதம், ஜாதி மற்றும் கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக, அவர் கைது நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றப்படமாட்டார்' என பதிலளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன், என பதிவிட்டுள்ளார். அதன் படி குற்றவாளியான பிரவேஷ் சுக்லா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க || "வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை"- ஆளுநா் ஆர்.என்.ரவி!