க்ரைம்

நடிகை விந்தியா பற்றி அவதூறு வீடியோ; குடியாத்தம் குமரனின் முன் ஜாமீன் தள்ளுபடி!

Malaimurasu Seithigal TV

அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி குடியாத்தம் குமரனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா குறித்து  அவதூறாக பேசி திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை புகார் அளித்தார். 

இதனை  தொடர்ந்து குமரன் மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், விந்தியா குறித்து தாம் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டீக்காரமன் முன்பு விசாரணைக்கு வந்த போது, குமரனுக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என விந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, குமரனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.