க்ரைம்

பிறந்த 30 நாட்களேயான நிலையில்..... விற்கப்பட்ட பெண் குழந்தை.... 

Malaimurasu Seithigal TV

சிவகாசி அருகே மாரனேரி கிராமம் ஈஸ்வரன் காலனியை சேர்ந்த பட்டாசு தொழிலாளிகளான பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் தம்பதியினர்.  இவர்களுக்கு ஏற்கனவே 2மகன்கள், ஒருமகள் இருந்த நிலையில் 4வது பெண் குழந்தை பிறந்துள்ளது.  தங்களது 4 வதுபெண் குழந்தையை பிறந்து 30  நாட்களில் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஜார்ஜ் -அயரின் தம்பதியினருக்கு ரூபாய் 40 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். 

மீட்கப்பட்ட குழந்தை:

பஞ்சவர்ணத்தின் தாயார் மாரியம்மாள் தந்த தகவலின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சமூக பணியாளர் ஜானகி மாரனேரி காவல்நிலையத்தில் புகார்கொடுத்து போலீசாருடன்   ஒருங்கிணைந்து  குழந்தையை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். 

குற்றவாளிகள் கைது:

சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு, குழந்தையை விற்பனை செய்த பெற்றோர்களான,  பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம்  தம்பதியினரையும், உடந்தையாக இருந்த வெம்பகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிராமப்புற செவிலியர் முத்துமாரி, மாரனேரி அரசு ஆரம்பசுகாதார நிலையசெவிலியர் அஜிதா, குழந்தையை  விலைக்கு வாங்கிய அயரின் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

தேடிவரும் போலீசார்:

தலைமறைவாக உள்ளஅயரின் கணவரான நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி  மேற்பார்வையாளராக பணிபுரியும் ஜார்ஜ் என்பவரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கிராமப்புறத்தில் பட்டாசு தொழிலாளி தம்பதியினர் தங்களது பெண்குழந்தையை விலைக்குவிற்ற கொடுமையான சம்பவம் சிவகாசி வட்டாரமக்களிடையே  பெரும்பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.