நாமக்கல்லில், பெண் ஒருவர் தன் 38 வயதில் செய்த தவறுக்காக, தற்போது 60 வயதில், நீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
நாமக்கல் அடுத்த கொல்லிமலையில் உள்ள நத்துக்குழி பட்டியை சேர்ந்தவர் சின்னையன். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு அன்று இந்திரா ஆவிஸ் யோஜனாவின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட மானியத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கான காசோலையினை அரசு ஒதுக்கியுள்ளது.
ஆனால் அரசால் கொடுக்கப்பட்ட காசோலையினை சின்னையனிடம் வழங்குவதற்கு அப்போதைய தாம்பபாடி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதன் பின் 400 ரூபாய் கொடுக்க முன் வந்த சின்னையன், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் பின் கடந்த 09.05.2002 ஆம் ஆண்டில் பொன்னமாள் கைது செய்யப்பட்டு பின்னர் இவ்வழக்கானது நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், பல வருடங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்னம்மாளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 6 ஆயிரம் ரூ அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
தீர்ப்புக்கு பின் பொன்னம்மாளை சிறையில் அடைப்பதற்கு முன், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வயது முதேர்வு காரணமாக அவருக்கு உடல் ரீதியான தொந்தரவு ஏற்பட்டதால், அவரை மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொன்னம்மாளுக்கு தற்போது 60 வயது என்பதும், சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் லஞ்சம் பெற்ற வழக்கில் மூதாட்டிக்கு சிறை தண்டனை கிடைத்துருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விமரிசையாக நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழா!