க்ரைம்

களவாளடப்பட்ட காவல் தெய்வத்தின் சிலை!

Malaimurasu Seithigal TV

குடியாத்தம் அருகே காவல் தெய்வத்தின் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் பகுதியில் குடியாத்தம்-சித்தூர் நெடுஞ்சாலையில் சாலை ஒரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே முனிஸ்வரன் கோயிலும் அந்த கோவிலில் கருப்புசாமி சிலையும் வைக்கப்பட்டு அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். மேலும் சாலையில் செல்லும் கனரகம் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த கோவிலில் வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இதனிடையே இன்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு செய்வதற்காக கோவிலுக்கு சென்ற போது முனீஸ்வரன் கோவிலில் இருந்த இரண்டு அடி கருப்புசாமி கல் சிலை காணாமல் போயிருந்தது. மேலும் கோவிலில் உள்ள காவல் தெய்வங்களின் கை மற்றும் கால்களில் சேதம் ஏற்பட்டிருந்தது. நேற்று இரவு மர்ம நபர்கள் கருப்புசாமி கல் சிலையை திருடியும் சிலைகளை சேதப்படுத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையொட்டி சம்பவ இடத்தில் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி விசாரணை மேற்கொண்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பரதராமி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் இருந்த கோவிலில் காவல் தெய்வங்களின் திருட்டு மற்றும் சிலைகள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.