க்ரைம்

சென்னையில் சேவலைப் பலியிட சென்ற நபர் பரிதாப மரணம்...உயிர்பிழைத்த சேவல்...நடந்தது என்ன?!!

Malaimurasu Seithigal TV

கோழிக்கு சிறிய கீறல் கூட படவில்லை.  அது உயிர் பிழைத்து பலியிட சென்ற நபர் இறந்தார். இறந்த நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லாததால், அவர் பிறந்த இடத்தைக் கண்டறிய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். 

”கடவுளால் காப்பாற்றப்பட்டவரை யாராலும் கொல்ல முடியாது” என்று ஒரு பழமொழி உண்டு.   இந்த சம்பவத்திற்கு இது சரியாகப் பொருந்துவதாக உள்ளது.  

முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்...

இறந்தவர் யார்?:

பல்லாவரம் பொழிச்சலூரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், இறந்தவர் ராஜேந்திரன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 70.  ராஜேந்திரன் கடந்த பல ஆண்டுகளாக தீய சக்திகளை விரட்டும் சடங்குகளை செய்து வந்துள்ளார்.  அதனால் லோகேஷ் என்பவர் கட்டுமானத்தில் உள்ள அவரது வீட்டில் சேவலைப் பலியிடச் கூறியுள்ளார்.

பேயோட்டும் சடங்கு:

லோகேஷின் வீடு மூன்றாவது மாடியில் உள்ளதால் கோழியை பலி கொடுக்க மாடிக்கு கொண்டு சென்றுள்ளார் ராஜேந்திரன். கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் லிப்ட்டிற்காக இடம் காலியாக  விடப்பட்டிருந்தது.  ராஜேந்திரன் அதிகாலை 4:30 மணியளவில் படிக்கட்டுகள் வழியாக தனியாக கட்டிடத்தின் மேல் தளத்தை அடைந்துள்ளார்.  அதன் பிறகு சில நிமிடங்களில் ராஜேந்திரன் திறந்த லிப்ட்டின் வழியாக தரைத்தளத்தை அடைந்துள்ளார்.

தப்பித்த சேவல்:

ராஜேந்திரனுடன் சேவலும் தரைத்தளத்திற்கு வந்தது.  ஆனால் சேவல் சிறிய கீறல் கூட படாமல் தப்பிய நிலையில் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.   இறந்த ராஜேந்திரனுக்கு குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லாததால், அவர் பிறந்த இடத்தை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை. 

குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கும் முயற்சி:

போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். 

-நப்பசலையார்