மேலும் படிக்க | காட்டிக் கொடுத்த நண்பர்கள்... போட்டுத் தள்ளிய கும்பல்...
சமீபத்தில் சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடைகளை தடுக்கும் நோக்கத்தில், கடும் நடவடிக்கை எடுத்து வரும் காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி தேடி பிடித்து வருகின்றனர்.
அதிலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விலைவிப்பவர்கள், கொலை மற்றும் கொலை முயற்சி, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி செயின் பறிப்பு தொடங்கி சைபர் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் வரை அனைவரையும் கண்காணித்து “குண்டர் சட்டத்தின்” கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தாண்டு ஜனவரி 1ம் தெதி முதல் இன்று வரை தொடர்ந்து நடத்திய கண்காணிப்புகளில் இது வரை நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் கைதாகியுள்ளனர்.
மேலும் படிக்க | ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்...
கொலை, கொலை முயற்சி, பொது மக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்றம் - 230 குற்றவாளிகள்
திருட்டு, செயின் பறிப்பி, வழிப்பறி, பணமோசடி குற்றங்கள் - 92 குற்றவாளிகள்
கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை உற்றம்- 51 குற்றவாளிகள்
பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய குற்றம் - 7 குற்றவாளிகள்
பெண்களை மானபங்கம் செய்த குற்றம் - 2 குற்றவாளிகள்
சைபர் குற்றம் - 7 குற்றவாளிகள்
உணவு பொருள் கடத்தல் பிரிவு - 1 குற்றவாளி
என மொத்தம் 390 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். இந்நிலையில், இந்த ஒரு வாரம் மட்டுமே, ஒரு பெண் உட்பட மொத்தம் 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர். நிஷா (எ) நிதி, பிரகாஷ் ஷர்மா, அஜய் ராகுல், அமர்நாத் (எ) அம்மாபாய், வெங்கையன், அஜேஷ் (எ) அஜித், பயாஸ் என்ற 7 பேர் தான் அந்த குற்றவாளிகள்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு அனைவரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | காட்டிக் கொடுத்த நண்பர்கள்... போட்டுத் தள்ளிய கும்பல்...