கவர் ஸ்டோரி

இந்தியாவில் இன்றுவரை 100% வாக்குபதிவான கிராமம்....எங்கு உள்ளது? எப்படி சாத்தியம்? 

Malaimurasu Seithigal TV

ராஜ்கோட்டில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள ராஜ் சமாதியாலா கிராமம் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.   இந்த கிராமத்தின் மக்கள் கிராம மேம்பாட்டுக் குழுவின் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். 

பிரச்சாரத்திற்கு தடை:

இந்த கிராமத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  வாக்களிக்காதவர்கள் 51 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது கிராமத்தில் 39 ஆண்டுகளாக அமலில் உள்ளது.  

விவாத மையமான கிராமம்:

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இந்நிலையில் குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள ராஜ் சமதியாலா கிராமம் தற்போது விவாத மையமாக மாறியுள்ளது.  

காரணம் என்ன?:

இங்குள்ள கிராம மக்கள் கிராம மேம்பாட்டுக் குழுவின் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என்ற கோட்பாடு கொண்டவர்கள். தேர்தலின் போது வாக்களிக்கவில்லை எனினும் அபராதம் செலுத்த வேண்டும்.  கிராமத்தில் இதுவரை 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது ஆச்சரியமான ஒன்று. 

கிராம தலைவர் கூறுவதென்ன:

அபராதம் விதிப்பதால், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்கிறது என, கிராமத்தின் தலைவர் கூறியுள்ளார்.  மேலும் ராஜ் சமதியாலா கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,700 எனவும் அவர்களில் 995 பேர் வாக்காளர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம் போல் வாக்களிக்கின்றனர் எனவும் கிராம மக்கள் குறைகளை களைய குழு அமைத்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.  

வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு, கமிட்டி உறுப்பினர்கள் கிராம மக்களின் கூட்டத்தை அழைப்பார்கள் எனவும் யாராவது வாக்களிக்க இயலாமையை வெளிப்படுத்தினால், அதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  கிராமத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற விதி 1983 முதல் நடைமுறையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்