கவர் ஸ்டோரி

ஆளுநருடனான இபிஎஸ் சந்திப்பின் உண்மையான பின்னணி என்ன?!

Malaimurasu Seithigal TV

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அளிக்கவே சென்றதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.  அதனுடன் திமுக ஆட்சி மீதான அவரது குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.  

திமுகவின் எதிர்கேள்விகள்:

இந்த குற்றச்சாட்டுகளைக் குறித்து பேசிய திமுக வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த பிரச்சினைகளை அவ்வப்போது பேசாமல் கால இடைவெளிக்கு பிறகு தற்போது பேசியிருப்பதற்கான காரணம் என்ன என கேள்வியெழுப்பியுள்ளது.  அதனோடு நில்லாமல் ஆதாரங்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் ஆளுநரை சந்தித்து பேசுவதற்கான காரணம் என்ன எனவும் கேட்டுள்ளது.  திமுக மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும் ஆளுநரை வேறு காரணமாகவே சந்தித்துள்ளார் இபிஎஸ் எனக் கூறியுள்ளது திமுக தரப்பு.

மெகா கூட்டணி:

அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமையும் என இபிஎஸ் ஆட்சியில் இருக்கும் போது அறிவித்திருந்தார்.  அதற்கு பாஜகவும் சம்மதம் தெரிவித்திருந்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.  பாஜக ஒத்துக் கொள்ள ஒரே காரணம் குஜராத்தை போல தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வலுவான அடித்தளம் இல்லை என்பதே.  அதோடு அப்போது அதிமுக தலைமியிலான ஆட்சி நடைபெற்று கொண்டிருந்ததும் முக்கிய காரணம்.

அதிமுகவை ஒதுக்கும் பாஜக?:

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாடு வருகை புரிந்தபோது அதிமுக தலைவர்களை சந்திக்காமல் சென்றுள்ளனர்.  அதற்காக சரியான விளக்கமும் அவர்கள் அளிக்கவில்லை.  இபிஎஸ் தரப்பில் கேட்டபோது குஜராத் தேர்தல் காரணமாக காட்டப்பட்டுள்ளது.  இதனால் திருப்தியடையாத இபிஎஸ் பாஜக தலைவர்களை பலமுறை சந்திக்க முயன்றும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் காரணமா?:

அதிமுகவில் பிளவினால் சரியான பலம் இபிஎஸ்ஸுக்கு இல்லை.  பாஜக இரு தர்ப்பைனரையும் இணைத்து வைக்கும் என்ற எண்ணம். மத்திய ஆட்சியில் பாஜக ஆட்சி இருப்பதால் தான் எப்போது வேண்டுமானாலும் சிக்கும் வாய்ப்பு இதுபோன்ற பல காரணங்களால் பாஜகவின் ஆதரவு தொடர்ந்து இபிஎஸ்ஸுக்கு தேவை.  பாஜகவின் தலைமையை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் கோரிக்கை வைக்கவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

-நப்பசலையார்