ஜீரோ கோவிட் கொள்கை:
சீனாவில் மூன்று ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. லாக்டவுனுக்கு எதிரான பொதுப் போராட்டங்களால் அச்சமடைந்த சீன அரசு, ஜீரோ கோவிட் கொள்கையைத் தளர்த்தியுள்ளது. சீனாவின் பெரிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பூங்காக்களுக்கு மக்கள் குவிந்ததால், இயல்பு நிலை திரும்பியுள்ளது.
எல்லையை திறந்த சீனா:
சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்துள்ள நிலையிலும் சர்வதேச பயணிகளுக்காக சீனா அதனது எல்லைகளை திறந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உற்சாகமான சூழல் நிலவி வருகிறது. பயணத்தை விரும்பும் இளைஞர்களிடையே கோவிட் அச்சம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் செயல்படுகிறார்கள். பூஜ்ஜிய கோவிட் கொள்கையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு நாட்டில் லட்சக்கணக்கில் நோய்த்தொற்று ஏற்பட்ட போதும் சீனா எல்லைகளைத் திறக்கும் நடவடிக்கையை எடுத்தது.
இளைஞர்களின் எண்ணம்:
சுதந்திரமாக நடமாடுவதால், இளைஞர்களே கோவிட் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோவிட் க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று மீண்டும் மீண்டும் தொற்றுநோய்களை தவிர்க்க முடியும் என இளைஞர்கள் நம்புகின்றனர். இது அவர்களது குடும்பத்தில் வசிக்கும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் எனவும் இளைஞர்கள் நம்புகின்றனர்.
கோவிட் தொடர்பாக சீனாவில் உள்ள இளைஞர்களின் சிந்தனை வித்தியாசமானது. அவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக கொரோனா அபாயத்தை சந்திக்க தயாராக உள்ளனர். ஷாங்காயை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் எந்த சீன கொரோனா தடுப்பூசியும் எடுக்கவில்லை எனினும் அவருடைய விடுமுறை திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறியுள்ளார். மற்றொரு சீனப் பெண், தனது கொரோனா பாசிட்டிவ் நண்பரைச் சந்திக்கச் சென்றதாகவும், அதனால் தனக்கும் கோவிட் வரலாம் என்று பேசியுள்ளார்.
பாதிப்படைந்தவர்:
பெய்ஜிங்கைச் சேர்ந்த சென் என்ற நபர் பேசுகையில், சீனாவில் கோவிட் சிகிச்சை மோசமான நிலையில் உள்ளது எனவும் கடந்த மாதம் அவரது 85 வயதான தந்தைக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அவருக்கு ஆம்புலன்ஸ் உதவியோ மருத்துவ உதவியோ கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்....யாரோ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம்!!!