கவர் ஸ்டோரி

அதிரடி மாற்றம்...அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு...பிளான் தான் என்ன?

Tamil Selvi Selvakumar

ஒரு துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட அமைச்சருக்கு தற்போது கூடுதலாக ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன்?

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்:

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதே தவிர, விரிவாக்கம் என்பது நடைபெறாமல் இருந்தது. இதனிடையே, சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்தும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியானது.

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்:

இந்நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். உதயநிதி அமைச்சர் ஆனதும்  தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உதயநிதி அமைச்சராக பதவியேற்ற கையோடு அமைச்சரவையில் இரண்டாவது முறையாக அதிரடி மாற்றம் நடைபெற்றுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சர்களுக்கு துறை ரீதியான இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது.

கூடுதல் பொறுப்பு வழங்கிய தமிழக அரசு:

அதன்படி, கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஒரு துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட அமைச்சருக்கு தற்போது கூடுதலாக ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன்? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்து வருகிறது. 

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்:

முன்னதாக, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு முதலில் வழங்கப்பட்டது போக்குவரத்து துறை தான். ஆனால், ஜாதி ரீதியிலான புகாரில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் சிக்கியதால் அவருக்கு அமைச்சரவை இலாக்காவை மாற்றி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதாவது முதலில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் இந்த விவகாரத்திற்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து மூத்த அமைச்சராக இருந்தும் ராஜகண்ணப்பன் அமைதியாகவே இருந்து வந்தார்.

கூடுதல் பொறுப்பு :

இந்நிலையில், இன்று அமைச்சரவையில் நடைபெற்ற அதிரடி மாற்றத்தில், ஜாதி ரீதியிலான பிரச்னையில் துறை மாற்றப்பட்ட ராஜகண்ணப்பனுக்கு மீண்டும் கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் இது ஹை பெட்ஜெட் துறை ஆகும். ராணிப்பேட்டை காந்தி அமைச்சரிடம் கூடுதலாக இருந்த அந்த துறை தற்போது ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பொறுப்பு கொடுப்பதற்கு காரணம்:

ஒரு துறையில் இருந்து வேறொரு துறைக்கு மாற்றப்பட்ட ஒரு அமைச்சருக்கு மீண்டும் கூடுதல் பொறுப்பு கொடுப்பதற்கு காரணம், வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து வழங்கியிருக்கலாம் என்று அரசியல் அரங்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.