கவர் ஸ்டோரி

ராணிக்கும் டயனாவிற்கும் இடையே கசப்பான உறவு ஏற்பட்ட காரணம் என்ன??

Malaimurasu Seithigal TV

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸை மணந்ததன் மூலம் ராணிக்கும் டயானாவுக்குமான நெருங்கிய உறவு தொடங்குகிறது.   திருமணத்திற்கு முன்பிருந்தே டயானாவிற்கும் பக்கிங்காம் அரண்மனைக்குமான உறவு நீடித்துள்ளது.  சிறு குழந்தையாக இருந்தபோதே டயானா சார்லஸி இளைய சகோதரர்களுடன் விளையாடியுள்ளார்.  அப்போதிலிருந்தே டயானாவை நன்கு அறிந்திருந்தார் ராணி இரண்டாம் எலிசபெத்.  டயானாவின் சகோதரி ராணியின் தனிச் செயலாளரை திருமணம் செய்து கொண்டார். டயானாவின் சகோதரருக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காட்மதர் ஆவார்.

டயானா- சார்லஸ் காதல்:

சார்லஸுக்கும் டயானாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது மிகவும் சுவாரஸ்யமானது. டயானாவிற்கு 16 வயதான போது அவரின் மூத்த சகோதரி சாராவை டேட்டிங் செய்து கொண்டிருந்தார் இளவரசர் சார்லஸ்.  அவர்கள் வெளியே செல்லும் போதெல்லாம் உடன் அழைத்து செல்லப்பட்டார் டயானா.  ஒரு கட்டத்தில் 12 வயது இடைவெளியையும் தாண்டி இவர்களுக்குள் காதல் மலர தொடங்கியது.  

திருமண பந்தம்:

ராணி இரண்டாம் எலிசபெத்திடம் சம்மதம் கேட்டபோது முதலில் மறுத்துள்ளார்.  தொடர்ச்சியான கோரிக்கைகளினால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் ராணி.  டயானாவின் 20ம் வயதில் 1981ல் தேவதைக் கதைகளில் வரும் திருமணம் போல மிக சிறப்பாக நடந்தது டயானா- சார்லஸ் திருமணம்.  ஆனால் திருமண நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கவில்லை.  அது அவர்களுக்கு திருமணத்தில் அவரது விருப்பமின்மையயே காட்டியது.

மாமியார்- மருமகள் உறவு:

சாதாரண ஒரு பெண்ணை போலவே டயானாவும் மாமியாருக்கு பயந்த மருமகளாகவே காணப்பட்டார்.  ராணியை நேருக்கு நேராக சந்திப்பதையே தவிர்த்து வந்தார் டயானா.  அவர்களிடையேயான உறவு அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்றே கூற வேண்டும்.  இதனிடையில் அரண்மனையின் விதிமுறைகளை எட்டு முறைக்கும் மேலாக மீறியுள்ளார் இளவரசி டயானா.  இதனால் ராணி எலிசபெத் இளவரசி டயானா மீது கடுமையான அதிருப்தியிலேயே இருந்துள்ளார்.  மேலும் மக்களுக்கு மிகவும் பிடித்தமானவராக மிகக் குறுகிய காலத்திலேயே மாறினார் டயானா. அதனுடன் ’மக்கள் இளவரசி’ எனவும் போற்றப்பட்டார்.  இதனால் ராணிக்கு இளவரசி மீது பொறாமை ஏற்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.

காதல் வாழ்வில் விரிசல்:

டயானா- சார்லஸ் வாழ்க்கையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு கமீலா பார்க்கர் என்பவரால் புயல் அடிக்க ஆரம்பித்தது.  இளவரசர் சாரலஸ்ஸுக்கு கமீலாவுடன் காதல் ஏற்பட்டது.  இதற்கு காரணமாக டயானா- சார்லஸ் இடையேயான வயது வித்தியாசம் கூறப்பட்டது.  அவர்களுக்குள் நல்ல உறவு ஏற்படவில்லை என்றும் பேசப்பட்டது.  

டயானாவை அரவணைத்த ராணி:

சார்லஸ்- கமீலா காதலால் மிகவும் உடைந்து போனார் இளவரசி டயானா.  அப்போது அவருக்கு ஆதரவும் ஆறுதலும் அளித்தார் ராணி இரண்டாம் எலிசபெத்.  பெரும்பாலான நேரங்களை டயானாவுடன் செலவிட்டார் ராணி.  இதனால் அவர்களுக்குள் நல்ல உறவு மலர ஆரம்பித்தது.  ஆனால் அதுவும் நீடிக்கவில்லை.  தன்னையே தனிமைப்படுத்த தொடங்கினார் இளவரசி டயானா.  விவகாரத்திற்கு பின்னர் அளித்த பேட்டியில் சார்லஸைக் குறித்து “ அவர் என்னை ஏமாற்றுவார் என எப்போதும் நினைக்கவில்லை.  நான் உடைந்து தனிமையில் அழுத காலம் அது” எனக் கூறினார்.  ராணியைக் குறித்து பேசும்போது “அவர் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தார்.  என்னுடைய கடினமான காலத்தில் உறுதுணையாக எப்போதும் உடனிருந்தார்”  என்றும் கூறியுள்ளார்.

இறுதி முயற்சி:

ராணி இரண்டாம் எலிசபெத் 1987ல் சார்லஸையும் டயானாவையும் இணைத்து வைக்கும் முயற்சி மேற்கொண்டார்.  ஆனால் அது தோல்வியிலேயே முடிந்தது.  இறுதியாக 1987ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.  ஆனால் டயானா தொடர்ந்து இளவரசியாக தொடர வழக்கு தொடர்ந்தார்.  ஆனால் டயானாவுக்கு எதிரான தீர்ப்பே வந்தது.  இதன் பின்னணியில் ராணியின் தலையீடு உள்ளதாக அப்போது கூறப்ப்ட்டது.  டயானாவின் மகன் வில்லியம்” கவலைப்படாதீர்கள் அம்மா.  

ஆறுதல் கூறிய மகன்:

நான் பெரியவனாகி உங்களுக்கு ராணி என்ற அங்கீகாரத்தை வழங்குவேன்” என்று கூறி தாயை சமாதானம் செய்தார்.  விவாகரத்திற்கு பிறகு சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டார் டயானா.  

டயானாவின் இறுதிப் பயணம்:

மக்கள் இளவரசியான டயானா 1992ல் கார் வெடித்து உலகை விட்டு சென்றாலும் தொடர்ந்து மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்.  டயானாவில் மரணத்திற்கு அரண்மனை சார்பில் எவ்வித அஞ்சலியும் செலுத்தப்படவில்லை.  மக்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து அரச மரியதையோடு டயானாவின் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் அஞ்சலியும் செய்யப்பட்டது.  

டயானாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ராணியின் முகத்தில் எவ்வித கவலையும் இல்லை என மக்கள் விமர்சித்தனர்.  அவருடைய மரணத்திற்கும் அரண்மனைக்கும் தொடர்பு இருந்ததாகவும் அப்போது பரப்பரப்பாக பேசப்ப்ட்டது.  ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.  

இறுதி வரை டயானாவிற்கும் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கும் இடையே நெருடலான கசப்பான உறவே நீடித்தது.  அதற்கு முக்கிய காரணம் மக்களிடையே டயானாவிற்கிருந்த செல்வாக்கும் அன்பும் ஆகும்.