கவர் ஸ்டோரி

நிரூபர்களை தடுத்த காவல் துறையினர்...கோபத்தில்  கொந்தளித்த ஈபிஎஸ்...!

Tamil Selvi Selvakumar

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்...!

கைதான ஈபிஎஸ்:

தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அரசுப் பேருந்துகள் மூலம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைத்தனர். 

செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ்:

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி தான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுகிறார், நடுநிலையோடு அவர் செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்தே ஆளும் கட்சி தேர்ந்தெடுக்கப்படுகின்றது. அதேபோன்று தான், அதிமுக கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து நாங்கள் தேர்தெடுத்து கொடுக்கப்பட்டதை சபாநாயகர் முடிவு செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை சட்டப்பேரவை தலைவர் நிராகரித்துவிட்டார்.  ஒருவேளை ஸ்டாலின் உடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியிலிருந்து நீங்கினால் ஸ்டாலின் அவர் பதவியை தொடரமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி ஒன்று இல்லை என்று குறிப்பிட்டவர், நாங்கள் வெளிநடப்பு செய்ததும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேசுவார் என்று ஓபிஎஸ்ஸை சொல்கிறார், இதிலிருந்தே அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவினரை எதிர்கொள்ள திராணி இல்லாமல்  ஓபிஎஸ் மூலம் அதிமுகவை சிதைக்க பார்ப்பதாக சாடினார். 

இடைமறித்த போலீசார்:

ராஜரத்தினம் மைதானத்தில் ஈபிஎஸ் செசெய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, நிரூபர்களையும், கேமரா மேன்களையும் போலீசார் தடுக்க முயன்றனர். 

ஆவேசமடைந்த ஈபிஎஸ்:

அப்போது கோபமடைந்த ஈபிஎஸ் போலீசாரிடம் ஆவேசமாக எழுந்து கத்தினார். ”என்னங்க பன்றீங்க...என்ன வேணும்...பேசிட்டு இருக்கல” இவ்வாறு கத்தி பேசினார். தொடர்ந்து, காவல் துறையினருக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டதால் காவல்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.