கவர் ஸ்டோரி

லிஸ் ட்ரஸ்ஸின் அரசியல் நெருக்கடிக்கான முக்கியமான காரணங்களும் விளக்கங்களும்!!

Malaimurasu Seithigal TV

இங்கிலாந்து அரசியல் நிகழ்வுகளின் ஒரு முக்கிய திருப்பமாக, லிஸ் ட்ரஸ் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களுக்குள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லிஸ் ட்ரஸ்ஸின் பதவி விலகலுக்கான காரணங்களை சுருக்கமாக காணலாம்...

  1. லிஸ் ட்ரஸ்ஸின் முதல் வாரம், ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக உயர்ந்து வரும் விலைகளை ஈடுசெய்யும் வகையில் எரிசக்தி வீட்டுக் கட்டணங்களைக் அதிகப்படுத்தும் வகையில் ஒரு விலையுயர்ந்த திட்டத்தை வெளியிட்டது.  மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

  2. இங்கிலாந்தின் புதிய அமைச்சரவையின் நிதி அமைச்சரான குவாசி க்வார்டெங் செப்டம்பரில் ஒரு "மினி-பட்ஜெட்டை" அறிவித்தார்.  இது ஆறு மாதங்களில் 67 பில்லியன் டாலருக்கான ஆற்றல் மிக்க திட்டங்களுக்கான விலையை விவரித்தது. ஆனால் அத்திட்டங்களுக்கு நிதி திரட்ட எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

  3. உறுதியான நடவடிக்கைகளுக்குப் பதிலாக, நிதி அமைச்சர் பெருமளவில் கடன் வாங்குதல் மற்றும் இங்கிலாந்தில் அதிக வருமானம் பெறுபவர்களும் பயன்பெறும் வகையில் புதிய வரிக் குறைப்பு கொள்கைகளை அறிவித்தார்.   இது டாலருக்கு நிகரான பவுண்ட் வீழ்ச்சிக்கு  இரண்டு நாட்களுக்குப் பிறகு, குவார்டெங் "இன்னும் வரிக் குறைப்புக்கள் வரும்" என்று உறுதிபட கூறினார்.  இது இங்கிலாந்து அமைச்சரவையின் அரசியல் தீங்கிற்கு வழிவகுத்தது. 

  4. விமர்சனங்கள் மற்றும் சலசலப்புகளைத் தொடர்ந்து, அவசர அவசரமாக இரவு நேரப் பேச்சுக்களைத் தொடர்ந்து, வருமான வரியின் உயர்மட்ட விகிதத்தில் அவர் திட்டமிட்ட வரிக் குறைப்பிலிருந்து யு-டர்ன் எடுக்க வேண்டிய கட்டாயம் லிஸ் ட்ரஸ்க்கு ஏற்பட்டது.  38 நாட்கள் அலுவலகத்தில் நிதி அமைச்சராக இருந்த குவாசி க்வார்டெங் பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

  5. இத்துடன் டிரஸ்ஸுக்கு நெருக்கடி முடிவடையவில்லை.  குடியேற்றம் தொடர்பாக ட்ரஸ் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட்டுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரது உள்துறை அமைச்சரான சுயெல்லா பேவர்மேனும் ராஜினாமா செய்தது லிஸ் ட்ரஸ்ஸூக்கு மேலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.          

                                                                                                                                 -நப்பசலையார்