கர்நாடகா கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுப்பட்ட தீர்ப்பு அளித்துள்ளனர். இதனால் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஹிஜாப்பிற்கு தடை.. ஹிஜாப்பிற்கு தடையில்லை.. உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு..!
நீதிபதி ஹேமந்த் குப்தா நாளையுடன் வெளியேறுவதை அடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...
2021:
டிசம்பர்:
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள கல்வி நிலையத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.
கல்வி நிலையத்தின் உத்தரவை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தியது அம்மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவியது.
2022:
ஜனவரி 3:
ஹிஜாப்புக்கு எதிராக ஜனவரி 3ம் தேதி சிக்கமகளூருவில் உள்ள அரசு கல்வி நிலையத்தில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து போராட்டம் நடத்தினர்.
ஜனவரி 6:
ஜனவரி 6ம் தேதி ஹிஜாப்புக்கு எதிராகவும், அனைவரும் சீருடை அணிவதை வலியுறுத்தியும் மங்களூருவில் உள்ள கல்வி நிலைய மாணவர்கள் காவிதுண்டுடன் நடத்திய போராட்டம் சர்ச்சையை கிளப்பியது.
ஜனவரி 14:
உடுப்பி கல்வி நிலையத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக மாணவிகள் போராடிய நிலையில், சில அமைப்புகளின் தூண்டுதலில் செயல்படுவதாக மாணவிகள் மீது கல்வி நிலைய நிர்வாகம் குற்றஞ்சாட்டியது.
ஜனவரி 26:
மாநிலம் முழுவதும் உள்ள பியூசி கல்வி நிலையங்களில் ஒரே மாதிரியான சீருடை கொண்டு வருவது தொடர்பான வழிமுறைகளை வகுக்க தனிக்குழு அமைக்க கர்நாடகா கல்வித்துறை முடிவு செய்தது
ஜனவரி 27:
உடுப்பி கல்வி நிலையத்தில் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டது.
ஜனவரி 31:
கல்வி நிலைய தலைவர், நிர்வாக குழு, உடுப்பி எம்.எல்.ஏ ரகுபதி பாத் ஆகியோர் மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதே நாளில், ஹிஜாப் அணிந்து வகுப்பில் கலந்து கொள்ள இடைக்கால அனுமதி வழங்க கோரி இஸ்லாமிய மாணவி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
பிப்ரவரி 2:
உடுப்பி, சிவமொக்கா மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
பிப்ரவரி 5:
சமூக நல்லிணக்கனம், ஒற்றுமைக்கு எதிரான உடைகளை வகுப்புகளில் ஹிஜாப் அணிய மாநில அரசு தடை விதித்தது.
பிப்ரவரி 7:
குண்டபுராவில் உள்ள கல்வி நிலையத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் தனியாக அமர்த்தப்பட்டனர்.
பிப்ரவரி 8:
ஹிஜாப் வழக்குகளை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும் என கூறியது.
பிப்ரவரி 9:
ஹிஜாப் பிரச்னைக்கு தீர்வு காண உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையில் நீதிபதிகள் குழு உருவாக்கப்பட்டது.
பிப்ரவரி 10:
உயர்நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய அவசர மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பிப்ரவரி 14:
144 தடை உத்தரவு அமலுடன் மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன.
பிப்ரவரி 16:
மீண்டும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.
பிப்ரவரி 20:
ஹிஜாப் சர்ச்சைக்கு இடையே, அதற்கு எதிராக பிரச்சாரம் செய்த பஜ்ரங்தல் உறுப்பினர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டார்.
பிப்ரவரி 25:
ஹிஜாப் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
மேலும் படிக்க | ஹிஜாப் அணியாத குர்திஷ் பெண் அடித்துக் கொலை…போராட்டம் வெடித்தது!
மார்ச் 15:
ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல என கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மார்ச் 16, 17:
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 18:
உயர்நீதிமன்றத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்ச் 27:
இதற்கிடையே தொழுகைகளின் போது கோயில்களில் பஜனைகள் பாடப்பட்டது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
மார்ச் 29:
உகாடி பண்டிகையின்போது ‘ஹலால்’ இறைச்சிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்து அமைப்பினர் பிரச்சாரம் செய்தனர்.
மேலும் படிக்க | இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடையா?!!
செப்டம்பர் 5:
ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற அமர்வு விசாரணைக்கு ஏற்றது.
செப்டம்பர் 22:
மேல்முறையீடு வழக்குகளில் இருதரப்பு விசாரணையும் கடந்த நிறைவுபெற்று, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். +
மேலும் படிக்க | ஹிஜாப் தடையை நியாயப்படுத்தி நீதிபதி குப்தா கேட்ட கேள்விகள்...!!! யார் இந்த ஹேமந்த் குப்தா?!
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
நீதிபதி ஹேமந்த் குப்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதி சுதான்ஷு தூலியா மேல்முறையீடு வழக்குகளை ஏற்று, ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம் என தீர்ப்பு வழங்கினார்.
பெண்குழந்தைகளின் கல்வியே அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என நீதிபதி சுதான்ஷு தூலியா கருத்து கூற, இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ”ஹிஜாப் வேண்டும்...” நீதிபதி துலியா ஆதரிக்கும் காரணம் என்ன?!!...யார் இந்த நீதிபதி துலியா?!!