கவர் ஸ்டோரி

காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் அன்னாள் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பரிமாறி காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாலை முரசு செய்தி குழு

காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கீழ்ச்சேரியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் காமராஜர் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்....

இதனை தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதற்கட்டமாக 2022ம் ஆண்டு செப்டம்பர் 15 ம் தேதி 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அதனை விரிவுப்படுத்தும் வகையில் திருவள்ளூர் புனித அன்னாள் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

இதனைத் தொடர்ந்து,காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி , அவர்களுக்கு ஊட்டி விட்டு, பேசியபடியே காலை உணவு அருந்தினார்.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சத்தி 23 ஆயிரம் மாணவர்கள் பயனடையவுள்ளனர். இதனையடுத்து, இதுவரை தமிழக அரசின் காலை உணவுத்திட்டத்தால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.