கவர் ஸ்டோரி

பணம் இருக்குனு பவுசு காட்டி பல்பு வாங்கிய பிரபலம்...!!!

யூடுயூப் பக்கத்தில் சம்யுக்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பார்போரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Malaimurasu Seithigal TV

தற்போது இருக்கும் காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் அனைவரும் தங்களுக்கு என்று யூடுயூப் சேனல்களை கட்டாயம் வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் கட்டாயம் யூடுயூப் சேனலை ஆரம்பித்துவிடுகின்றனர். காரணம் இவர்கள் சின்னத்திரையில் சம்பாதிப்பதைவிட யூடுயூபில் மாதா மாதம் ஒரு நிலையான வருமானத்தை ஈட்டி விடுகின்றனர். இப்படி அந்த லிஸ்டில் சமீபத்தில் இடம்பிடித்து இருப்பவர் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும், பிரபல மாடலுமான சம்யுக்தா இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனக்கென பல ரசிகர்களைப் பெற்றவர் இவர் போக போக தனது attitude மூலம் பலரின் வெறுப்புகளை சம்பாதித்தார் பிறகு பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியே வந்து தொடர்ந்து மாடல் ஷோக்களை நடத்தினார். இடையில் சின்னத்திரையிலும் எட்டி பார்த்தார். அதேவேளையில் பல படங்களிலும் கமிட் ஆனார். தற்போது ஒளிபரப்பாகவுள்ள ஜீ தமிழ் குட்டீஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் வர உள்ளார். இப்படி பலவகையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவர் லாக்டவுனில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார் அதில் குக்கிங், மேக்கப், டிராவல் போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தார் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மிக எளிதில் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஃபுட் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த சம்யுக்தா, அண்மையில் அவரின் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். அப்போது தான் அவருடைய ஃபேவரெட் ஹோட்டலான  திருவனந்தபுரத்தில் இருக்கும் உலக புகழ்ப்பெற்ற, பல விருதுகளை சொந்தமாக்கிய பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு மதிய உணவு உண்ண சென்றார் அந்த ஹோட்டலை சுற்றிக்காட்டியபடி அங்குள்ள உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தும்போது தான் பார்வையாளருக்கு அதிர்ச்சியடைந்தனர். ஒரு வேலை உணவை கூட முழுசாக உண்ணாமல் அதற்கு 5000 ரூபாய் கட்டணம் செலுத்தியதுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.

அனாதையிடம் உன் அன்னையை பற்றி பேசாதே, நோயாளியிடம் உன் ஆரோக்கியத்தை பற்றி பேசாதே, தோற்றவனிடம் உன் வெற்றியை பற்றி பேசாதே, ஏழையிடம் உன் செல்வதை பற்றி பேசாதே என்று சம்யுதாவிற்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கவில்லை போலும் பெரும்பாலும் பாமரன் வசிக்கும் நாட்டில் பணபெருமையை பறைசாற்றும் வகையில் பதிவிட்டது பலரின் ஆதங்கத்தை தூண்டிவிட்டது அதனால் அந்த காணொளியில் பலர் பணக்காரர்கள் மீதான வன்மத்தையெல்லாம் ஒட்டுமொத்தமாக சம்யுக்தா மீது இறக்கி வைத்துவிட்டனர். அவரின் எந்த விடியோவிலும் இல்லாத அளவிற்கு ”ரூ. 5000 இருந்தால் நாங்கள் 2 மாசத்துக்கு சாப்பிடுவோம் ”என்றும், ”இந்த பணத்தை ரோட்டில் சாப்பாடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கோம்” என்றும் வேறு சில ”எங்களுடைய மாத சம்பளமே ரூ. 5000 தான் , பல் இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான்” என்று பலவகையான நெகட்டிவ் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

சம்யுக்தா அந்த உணவகத்தில் உண்டதில் எந்த தவறும் இல்லை அதை வீடியோ எடுத்து பதிவிடத்திலும் எந்த தவறும் இல்லை ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் உணவு அவ்வளவு விலை தான் இருக்கும் என்று தெரிந்தும் அதை பார்த்து கடந்து செல்ல முடியாமல் கமெண்டுகளில் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றாள் இந்த சமூகத்தில் வன்மம் normalize ஆகி கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.