ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. ஆப்கன் வெற்றியை தொடர்ந்து காஷ்மீரை கைப்பற்ற தாலிபான்கள் முயற்சிக்க கூடும் என கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் காஷ்மீர் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்ஹானை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு இரு மாதங்கள் முன் லஷ்கர் இ-தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் அல் பதர் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸை கூடுதல் கவனத்துடன் வளர்த்து வருவது தெரிய வந்துள்ளதாக இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது காஷ்மீர் எல்லையில் 200 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும், பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஐஎஸ்ஐ உத்தரவுக்கு காத்து இருப்பதாக அந்த உளவு அதிகாரி தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்ற நவீன ஆயுதங்களை தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் வழங்கி இருக்கலாம் என அச்சம் தெரிவித்த உளவு அதிகாரி, காஷ்மீரின் எல்லையோர பகுதிகளான குப்வாரா மற்றும் பாராமுல்லா உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் அதிக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
இதனால் தீவிரவாதிகளுக்கு உதவி செய்யக்கூடும் என கருதப்படும் 500 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பாகிஸ்தான் எல்லை பகுதியில் கவனத்துடன் இருக்க வேண்டும் என இந்திய உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தானின் தலிபான் எச்சரிக்கையை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பாதுகாப்பு குறித்த முக்கிய ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.