கவர் ஸ்டோரி

பலிக்காத மோடியின் முகம்...என்ன செய்ய போகிறது பாஜக?!!

Malaimurasu Seithigal TV

குஜராத்தில் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது.  ஒவ்வொரு முறையும் போலவே, பிரதமர் மோடியின் முகம் வெற்றிக்குப் பின்னால் வேலை செய்துள்ளது.  ஆனால் மாநிலங்களில் வலுவான தலைமை போன்ற சவால்கள் இன்னும் கட்சிக்கு முன்னால் இருக்கவே செய்கிறது.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை?:

மறுபுறம், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸின் வெற்றியும், குஜராத்தில் ஆம் ஆத்மியின் வெற்றியும் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.  ஆனால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் பாதை எளிதாகி வருவதாகத் தெரியவில்லை.

மோடியின் முகமே:

கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த இரண்டு மக்களவை மற்றும் பல சட்டசபை தேர்தல்களின் முடிவுகள், தேர்தல் வெற்றிக்கு மோடியின் முகம் தான் முக்கிய காரணம் என்பதை நிரூபித்துள்ளது.  கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தல்களில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது.

இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில், இந்த மாநிலங்களில் கட்சி கிட்டத்தட்ட வெற்றி பெற்றது.  டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தாலும் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் மக்களவையில் வெற்றி பெற்றனர். இமாச்சலப் பிரதேசமும் அதே போக்கையே மீண்டும் நிரூபித்துள்ளது.

பலிக்காதா மோடியின் முகம்:

குஜராத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டதன் மூலம், மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் பாஜகவின் கனவு நனவாகியுள்ளது.  இருப்பினும், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றும் பாரம்பரியத்தை பாஜகவால் முறியடிக்க முடியவில்லை.  குஜராத்தில் மகத்தான வெற்றி பெற்றாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் அக்கட்சியின் மிகப்பெரிய சவால் இன்னும் நீடித்து கொண்டு தான் இருக்கிறது.

தேவை தீவிர வேலை:

குஜராத்தில் வரலாற்று வெற்றியும் , ஹிமாச்சலில் தோல்வியும் மக்களவை தேர்தலில் தீவிரமாக இயங்க வேண்டும் என்பதை காட்டுகிறது.  ஏனெனில், குஜராத்தில், 2014 லோக்சபா தேர்தலை விட, 2017 சட்டசபை தேர்தலில், அக்கட்சி 10 சதவீதம் குறைவான ஓட்டுகளை பெற்றது.  

மேலும், இம்முறை சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றாலும், 2019 மக்களவை தேர்தலை விட, எட்டு சதவீதம் ஓட்டு சதவீதம் குறைவாக உள்ளது.  கடந்த மக்களவை தேர்தலை விட, ஹிமாச்சல பிரதேசத்தில், பாஜகவுக்கு 23 சதவீதம் குறைவான ஓட்டுகளே கிடைத்துள்ளன. 

-நப்பசலையார்