பிரதமர் பதவியில் இருந்து லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததன் மூலம், இங்கிலாந்தில் புதிய அரசியல் நெருக்கடி தொடங்கியுள்ளது.
வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் லிஸ் ட்ரஸ் இருந்துள்ள நிலையில் தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியில் புதிய பிரதமருக்கான போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெயர்கள் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிஸ் ட்ரஸ் எப்படி பிரதமராகப் பொறுப்பேற்றார் மற்றும் அவரது 45 நாட்கள் பதவிக் காலத்தில் அவர் எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொண்டார் என்பதை விவாதிக்கலாம்...
செப்டம்பர் 5: கடுமையான போட்டியில் ரிஷி சுனக்கை தோற்கடித்து லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செப்டம்பர் 6: போரிஸ் ஜான்சனை கட்சியின் தலைவராக மாற்றி லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் பிரதமரானார்.
ஆனால் தற்போது 45 நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்துள்ளார். இதற்கு முன் ஜார்ஜ் கேனிங் 119 நாட்கள் பிரதமராக இருந்ததே மிகக் குறைந்த நாளாக இருந்தது.
செப்டம்பர் 8: ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததால் இங்கிலாந்து முழுவதும் துக்க அலை பரவியது. ராணி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் லிஸ் ட்ரஸை பிரதமராக நியமித்தார்.
செப்டம்பர் 23: லிஸ் ட்ரஸ்ஸின் ஆதரவாளரும் இங்கிலாந்தின் நிதி அமைச்சருமான குவாசி குவார்டெங், அமைச்சரவை பொறுப்பேற்று மூன்றாவது வாரத்தில் 45 பில்லியன் பவுண்டுகள் வரி குறைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதை அவர் மினி-பட்ஜெட் என்றும் அழைத்துக் கொண்டார்.
செப்டம்பர் 26: டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்ததால் மினி பட்ஜெட் மிகப்பெரிய தோல்வியடைந்தது.
இதனால் இனி பட்ஜெட் பெரிய பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்தியதாக பரவலாக நம்பப்பட்டது. குவார்டெங்கின் அனைத்து முடிவுகளும் பின்னர் அப்படியே தலைகீழாக மாற்றப்பட்டு அவரது வரிகுறைப்பு திட்டம் தள்ளுபடியும் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் இந்த முடிவு சரியானதே என ட்ரஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 3: லிஸ் ட்ரஸ் மற்றும் குவார்டெங் வரிக் குறைப்பை திரும்பப் பெற்றனர்.
அக்டோபர் 14: லிஸ் ட்ரஸ் நிதி அமைச்சராக இருந்த குவார்டெங்கை பதவி நீக்கம் செய்து ஜெர்மி ஹன்ட்டை புதிய நிதியமைச்சராக நியமனம் செய்தார். அப்போதிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் சட்டமியற்றும் உறுப்பினர்கள் பலரை லிஸ் ட்ரஸ்ஸை பதவி விலகுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அக்டோபர் 19: லிஸ் ட்ரஸ் அமைச்சரவையின் உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், குவார்டெங்கிற்குப் பிறகு அவரது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தனது உயர்மட்ட அணியில் ஏற்பட்ட பிளவைக் குறைக்க லிஸ் ட்ரஸ் கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் ஜெர்மி ஹன்ட் ஆகியோரை பணியமர்த்த வேண்டிய நிர்பந்தம் உருவானது.
அக்டோபர் 20: லிஸ் டிரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்தபின் ஆற்றிய உரையில், "கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பணியை என்னால் செய்து முடிக்க முடியவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
மீண்டும் தேர்தல்:
இன்னும் ஒரு வாரத்திற்குள் கட்சியில் மீண்டும் தலைமைக்கான தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டிரஸ்ஸுக்கு மாற்றாக ஒரு தலைவர் வரும் வரை அவர் தலைவராகத் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவின் 100வது விமான நிலைய சேவை நிறுத்தப்படுகிறதா!!! நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?!!