நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து ஐந்து எம்எல்ஏக்களை மட்டுமே சட்டசபைக்கு அனுப்ப முடிந்ததால் வருந்திய ராமதாஸ், உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினரே செய்த துரோகத்தினால் போட்டியிடுவதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது இதை முன்னரே சொல்லியிருந்தால் அந்தமானிலிருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்திருப்பேன் என்று வேதனையை வெளிப்படுத்திய பின்னர் நாம் ஆண்ட பரம்பரை வழியில் வந்தவர்கள் வீர வன்னியர்கள், ஆனால், இன்று அடுத்தவர்களுக்கு துதி பாடி கொண்டிருக்கிறோம் ஆனால் இந்நிலை மாறி அடுத்து வரும் தேர்தலில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும் என்று கூட்டங்களில் காட்டமாக தெரிவித்திருந்தார்
அதனை தொடர்ந்து தான் உயிருடன் இருக்கும்போதே அன்புமணியை போன்று திறமைமிக்க தலைவரை கோட்டையில் உட்கார வைத்துவிட வேண்டும் அதற்காக வீடு வீடாக திண்ணை திண்ணையாக சென்று மக்களிடம் வஞ்சகம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு அளித்தது போதும் இனி ஒரு முறையாவது பாமகவிற்கு வாக்கு அளிக்குமாறு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்து எடுத்துறைக்க வேண்டும் என்றும் தன் கட்சி நிர்வாகிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
வருகின்ற தேர்தலில் எப்படியாவது 60 தொகுதிகளை கைப்பற்றிவிட்டால் தமிழகத்தில் முதல்வராகி விடலாம் என்ற நம்பிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வரும் அவருக்கு பாஜக கூட்டண, ஜெய் பீம் சர்ச்சை, வன்னியர் இடஒதிக்கீடு, போன்ற பிரச்சனைகள் பெருத்த சருக்கலாகவே அமைந்துள்ளது. இதனால் அன்புமணியை முதல்வராகும் திட்டடம் நிறைவேறதோ என்று வருத்தத்தில் இருக்கும் ராமதாஸிற்கு ஒரே நம்பிக்கை குமாரசாமி கௌடா தான். இவர் இந்தியாவின் 14வது பிரதமர் தேவ கௌடாவின் மகன் கர்நாடகத்தில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு மூன்று முறை முதல்வராகியுள்ளார். இவரை ஒரு role modelஆகா வைத்துகொன்டு அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனித்து நின்று 60 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்பதில் உறுதியோடு இருக்கும் ராமதாஸ் அந்த நம்பிக்கையை தனது தொடர்களுக்கும் ஊட்டி வருகிறார்.
ஆனால் தேவகவுடா மூத்த தலைவர் பழுத்த அரசியல்வாதி ... ராமதாஸோ ஆரம்பம் அரசியல்வாதி, பண்ருட்டி ராமச்சந்திரன் தயவால் வன்னியர் சங்கம் வளர்த்து ... பிறகு சமூகநீதி அரசியல் உள்வாங்கி பாட்டாளி மக்கள் கட்சி என்கிற கட்சி ஆரம்பித்தது வெகுமக்கள் ஆதரவோடு நல்ல முறையில் வளர்ச்சியடைந்து ... ஆனால் குடும்ப அரசியல் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டு வந்து குடும்ப அரசியல் செய்வதாலும் இன்னும் பல சர்ச்சைகளில் சிக்கியதாலும் வெகுஜன மக்களுக்கும் அவரின் சொந்த ஜாதி மக்களுக்குமே அவர் மீது நம்பிக்கை போய்விட்டது கட்சிப் பயனாளிகளால் ஏதோ போய்க்கொண்டிருக்கும் கட்சி அன்புமணி தலைமை ஏற்றால் உள்ளதும் போய்விடும் என்று சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.