பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கான மரியாதைத் தொகை என்றும் அழைக்கப்படுகிறது.
முதல் தவணை முதல் இன்றுவரை:
பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா 2019ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் தவணையை பெற்ற மொத்த விவசாயிகள் 11.84 கோடி. கடந்த ஜூன் மாதம் 11வது தவணையை பெற்ற மொத்த விவசாயிகள் வெறும் 3.87 கோடியே. எண்ணிக்கையை பார்க்கும் போதே எவ்வளவு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
பின்னோக்கி செல்லும் திட்டம்:
முதல் தவணையில் 11.84 கோடிப் பேருக்கு தரப்பட்டு வந்த தொகையானது 9.87 கோடியாக இருந்தது ஆனால் தற்போது 3.87 கோடியாக குறைந்துவிட்டது. எந்த திட்டமாக இருந்தாலும் முதலில் அதை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து பின்னர் அதிகரிக்கும். ஆனால் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இந்த எண்ணிக்கை முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி மிக அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
முடக்க திட்டமா?:
எண்ணிக்கையை குறைத்து கொண்டு வருவதை பார்க்கும் போது திட்டத்தை முடக்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்பதை காட்டுவதாகவே உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்போம் என அறிவித்த மோடியின் முதல் ஆண்டு ஆட்சி கால முடிவிலும் எதுவும் நடந்தேற்வில்லை. இரண்டாவது ஆண்டு கால ஆட்சி முடியவுள்ள நிலையிலும் இதற்கான எவ்வித முயற்சியும் செய்தபாடில்லை.
பொய்யான வாக்குறுதிகள்:
விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறோம் எனக் கூறி மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். அதில் விவசாயிகளின் நலன் சிறிதும் வெளிப்படவில்லை. அனைத்தும் கார்ப்பரேட்டின் நலன் சார்ந்தவையே. விவசாயிகளின் டெல்லி போராட்டத்தால் சட்டத்தை திரும்ப பெற்றது பாஜக அரசு. அதற்கும் காரணம் சுயநலமே அன்றி விவசாயிகள் நலம் அல்ல.
இந்த தவறை மறைக்கவே கிசான் சம்மன் நிதி திட்டத்தை கொண்டு வந்தது பாஜக. அதுவும் பின்னடவையே சந்தித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் அளிப்பேன் எனக் கூறினார். இன்றுவரை அதற்கான முயற்சி இல்லை.
அதனோடு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக அறிவித்தார் மோடி. அதன்படி பார்த்தால் 2014 முதல் இன்று வரை 16 கோடி பேருக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆட்சி முடியவுள்ள நிலையில் நேற்று மக்களை ஏமாற்றும் விதமாக 71 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளா பிரதமர்.
இவ்வாறு தொடர்ந்து வந்த இரண்டு ஆட்சிகளிலும் தன்னிலையை தக்க வைக்க பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகிறது பாஜக. அவரது அனைத்து வாக்குறுதிகளும் பொய்யான வாக்குறுதிகளே.
-நப்பசலையார்