இந்தியாவில் ஒரு சிறப்பு இடத்தில் மட்டுமே சிவப்பு சந்தனம் காணப்படுகிறது. அந்த மரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இது பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது.
சிவப்பு சந்தனம்:
சிவப்பு சந்தனத்தின் அறிவியல் பெயர் Pterocarpus santalinus. இது ஆந்திரப் பிரதேச காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அங்கு மரத்தை கடத்துவதும் பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்த சந்தன மரங்களின் பாதுகாப்பை சிறப்பு அதிரடிப்படை வீரர்களே மேற்கொள்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயமாகும்.
எங்கு காணப்படுகிறது?:
ஆந்திராவில் உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் சிவப்பு சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இது இந்து மதத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. வெள்ளைச் சந்தனத்துக்கு மணம் உண்டு. ஆனால் சிவப்பு சந்தனத்துக்கு வாசனை இல்லை எனினும் அதன் பயன் மிகப் பெரியது. அது அதிக அளவிலான நன்மையை அளிக்கிறது. இந்த சந்தனமானது மருத்துவத்துடன், அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
எதற்கு பயன்படுகிறது?:
விலையுயர்ந்த மரச்சாமான்கள் மற்றும் அலங்கார வேலைகளுக்கும் இந்த சந்தன மரங்கள் தேவைப்படுகின்றன. இவை தவிர மதுபானம் மற்றும் அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச சந்தையில் இந்த சந்தன மரத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. சர்வதேச ஒப்பந்தப்படி, இந்த சிவப்பு சந்தன மரங்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது.
கடத்தலும் பாதுகாப்பும்:
ஆந்திரப் பிரதேசம், சித்தூர், கடப்பா, நெல்லூர், கர்னூல் ஆகிய நான்கு மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கும் சேஷாசலம் மலைப்பகுதியில் சிவப்பு சந்தன மரங்கள் காணப்படுகின்றன. ஆந்திராவின் இந்த மாவட்டங்கள் தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இந்த மரங்கள் 11 மீட்டர் உயரம் வரை வளர்வதுடன் அடர்த்தியாகவும் காணப்படுகின்றன. சிவப்பு சந்தனத்தின் கண்டறிய எளிய வழி அதன் தண்ணீரில் மூழ்கும் பண்பாகும்.
சிவப்பு சந்தன கடத்தல் சர்வதேச அளவில் நடக்கிறது. சேஷாசலம் மலைகள் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சிறப்பு வாய்ந்த சிவப்பு சந்தன மரங்களின் எண்ணிக்கை தற்போது 50 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நடந்த என்கவுன்டரில் 20 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதுடன் பெரும் எண்ணிகையிலான கடத்தல்காரர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
அதிக தேவை:
சாலை, நீர், வான்வெளி ஆகிய மூன்று போக்குவரத்து வழிகளிலும் கடத்தல்காரர்கள் சிவப்பு சந்தனத்தை கடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு வாய்ந்த சந்தன மரத்திற்கு உலகின் பல நாடுகளில் அதிக அளவில் கிராக்கி இருந்தாலும், சீனாவில் தான் அதிக தேவை உள்ளது. அங்கு ஏற்றுமதி செய்வதற்காகவே இந்த மரங்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-நப்பசலையார்
இதையும் படிக்க: சீனாவிடமிருந்து நிதி பெறுகிறதா ராஜீவ் காந்தி அறக்கட்டளை?!!! அனுராக் தாக்கூர் கேள்விக்கு ராகுலின் பதிலென்ன?!!