கவர் ஸ்டோரி

தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம்...அண்ணாமலையின் அதிரடி அறிவிப்பு...எங்கிருந்து தெரியுமா?

Tamil Selvi Selvakumar

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி நடைப்பயணம் :

முன்னதாக, வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், இந்தியாவை ஒற்றுமையாக இணைக்கும் நோக்கிலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியன்று தொடங்கினார். முதலில் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அடுத்தடுத்து கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லி வழியாக காஷ்மீரில் தொடங்கியுள்ளார். குமரி முதல் காஷ்மீர் வரை என்பதால் வரும் ஜனவரி 30 ஆம் தேதியுடன் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் முடிவடைய உள்ளது. இந்த நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வட்டமடித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் நடைப்பயணம் :

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவுக்கு கைக்கொடுக்குமா?:

இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து அந்த நடைப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தொடர்ந்து அண்ணாமலையும் அதே நடைப்பயணம் யுத்தியை கையில் எடுத்திருப்பது அரசியல் பார்வையாளர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஒற்றுமை நடைப்பயணமே காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுக்குமா? என்ற கேள்வி நிலவி வரும் நிலையில், தற்போது ஆண்ணாமலையின் தமிழ்நாடு நடைப்பயணம் பாஜகவுக்கு கைக்கொடுக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வட்டமடித்து வருகிறது.