கவர் ஸ்டோரி

பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!!

சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Suaif Arsath

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி, கடந்த 13ம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று  கலவரமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளர்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது காவல் துறை சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.