குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பாஜக புதிய சாதனையுடன் வெற்றிப் பெற்றுள்ளது. 182 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் போட்டியிட்ட 77 தொகுதிகளில் வெறும் 17 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதே நேரத்தில், இந்த முறை ஆட்சி அமைப்பதாக கூறி வந்த ஆம் ஆத்மி கட்சியின் ஐந்து வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.
மேலும் தெரிந்துகொள்க: பாஜகவின் இரும்பு கோட்டையில் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை!!!
நிரூபித்த காங்கிரஸ்:
இந்த தேர்தலில் பனஸ்கந்தா மாவட்டத்தின் டான்டா தொகுதியின் முடிவைப் பற்றி பேசினால், இங்கு மீண்டும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட காந்திபாய் கலாபாய் , பாஜகவின் லதுபாய் சந்த்பாய் பார்கியை 6,327 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
இந்த தொகுதியின் கடந்த கால தேர்தல்களின் முடிவுகளைப் பற்றி பேசினால், கடந்த இருபதாண்டுகளாக காங்கிரஸின் ஆட்சிதான் இங்கு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் இதுவரை இரண்டு முறை மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. 1990 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை பாஜகவின் காந்திபாய் கச்சோரியா இங்கு தாமரை சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஹாட்ரிக் வெற்றி:
காங்கிரஸ் 2022 சட்டசபை தேர்தலிலும் காந்திபாய் கலாபாய்க்கு வாய்ப்பளித்தது. கட்சியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றியும் பெற்றுள்ளார் கலாபாய். இந்த தொகுதியில் லதுபாய் சந்த்பாய் பார்கியை காங்கிரசுக்கு எதிராக பாஜக நிறுத்தியது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று காங்கிரஸின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார் காந்திபாய். இந்த வெற்றி மூலம் 24 ஆண்டுகளாக டண்டன் தொகுதி காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நிரூபித்துள்ளது காங்கிரஸ்.
-நப்பசலையார்