கவர் ஸ்டோரி

அதிமுகவை சிதைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள பாஜக: 2014 முதல் 2022 வரை ஒரு பார்வை

Malaimurasu Seithigal TV

2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்,தமிழ்நாட்டில் அரசியல் அடையாளமே இல்லாத இந்தியா ஜனநாயக கட்சி உடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தமிழ்நாடு என்றாலே அது திமுக-அதிமுக எதிர் துருவ அரசியல் களமாக இருந்த நிலையை மாற்றி மூன்றாவதாக பாஜகவும் போட்டியிட்டது தனித்து கவனிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள  39 இடங்களுக்காக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை ஓரங்கட்டி அதிமுக-பாஜக என்ற நிலை உருவானது.  அந்த நாடாளுமன்ற தேர்தலில், லேடியா-மோடியா என்ற பிரச்சாரத்தை ஜெயலலிதா முன்னெடுத்தார். அதற்கு கைமேல் பலனாக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் இடங்களில் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது. கன்னியாகுமரியில் பொன்ராதாகிருஷ்ணனுன், தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் மட்டுமே வெற்றி பெற்றனர். திமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.  

நோட்டாவுடன் போட்டியிட்ட பாஜக:

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியே நடைபெற்று வருகிறது.  வேறு எந்த கட்சியும் மாற்று சக்தியாக உருவாக முடியாது என்ற சூழலில் பாஜக 2016 சட்டசபை தேர்தலில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.  தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசினார் அப்போதைய தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.  அதே நேரத்தில் பாஜகவின் ஹெச். ராஜா சாரண சாரணியர் அமைப்பிற்கான தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால், பாஜகவை நோட்டா கட்சி என்றும், தாமரை மலரவே மலராது என்றும் கூறினார்கள்.

4 எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அனுப்பிய பாஜக:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உயிர்ந்த நிலையில், அதுவரை பாஜக, மோடி எதிர்ப்பில் உறுதியாக இருந்த அதிமுக தலைவர்கள் மோடிக்கு ஆதரவானை நிலைப்பாட்டை எடுத்தார்கள். ஓபிஎஸ் தரும யுத்தத்திற்கே பாஜக தான் காரணம் என்றார்கள். மோடியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் தான் தர்ம யுத்தத்திற்கு காரணம் என்று பேசப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு பாஜக சொல்வதையே அதிமுக செய்யும் நிலை ஏற்பட்டது. ஜெயலலிதா மறைந்த சில மாதங்களில் பாஜகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களைக் கைப்பற்றியது.  இறுதியாக 4 அமைச்சர்களை சட்டசபைக்கு அனுப்பி தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்வோம் என்ற கொள்கையில் வெற்றியும் பெற்றது பாஜக.

பொய் பரப்பு செய்யும் அண்ணாமலை:

தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலை பாஜக ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வருவோம் என்ற கொள்கையோடே பொறுப்பேற்றார்.  தொடர்ந்து பல விமர்சனங்களை திமுகவிற்கு எதிராக அளித்து வந்த அண்ணாமலை திமுகவினருக்கு மிரட்டல் விட ஆரம்பித்தார்.  சில மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடந்ததைத் தொடர்ந்து அடுத்து தமிழ்நாடு தான் எனவும் திமுகவில் ஊழல் செய்வோரின் பட்டியல் விவரங்களோடு அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்து வந்தார்.   ஆனால், இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல் வெறும் எக்ஸ்.எல். ஷூட் அரசியலை மட்டுமே அண்ணாமலை முன்னெடுத்து வருகிறார். எதிர்க்கட்சியாக அதிமுக செய்ய வேண்டிய அரசியலைக் கூட அந்த கட்சி செய்யாமல், பாஜகவே எதிர்க்கட்சியாக செயல்படும் சூழலை பாஜக ஏற்படுத்தி வருகிறது. அதற்கு அதிமுகவை தொடர்ச்சியாக உட்கட்சி பிரச்னையிலேயே இருக்க வைத்துவிட்டு, பாஜக மட்டுமே எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்ற தோற்றத்தையும் அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார். இதுதான் அண்ணாமலையின் கணக்காக உள்ளது. 

அதிமுக உட்பூசலில் வளர்கிறதா பாஜக: 

ஜெயலலிதா ஆட்சியிலும் கட்சியின் அதிகாரத்திலும் இருந்த வரை வலுவான நிலையையே அடைந்து இருந்தது. அவரது மறைவிற்கு பிறகு அந்த கட்சியை, தரும யுத்தம், சசிகலா அரசியலில் சிக்கலை ஏற்படுத்துவது, இரட்டை தலைமையை ஏற்படுத்தி வலுவான கட்சியாக செய்லபட விடாமல் தடுப்பது, நீட், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை மக்கள் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்த வைப்பது என பாஜக தனது அதிகாரத்தையும், தனது கனவுகளையும் அதிமுகவை ஒரு பொம்மை போல் ஆட்டுவித்து செயல்படுத்தி வருகிறது. இதற்காகவே அந்த கட்சியை ஒற்றைத்தலைமை அல்லது பொதுச்செயலாளர் இல்லாத கட்சியாக மாற்றி அரசியல் செய்கிறது பாஜக என்ற அரசியல் விமர்சகர்களின் விமர்சனத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.