உனக்கு 30 எனக்கு 93.....நிலவில் கால் பதித்த வீரரின் கோலாகலமான திருமணம்!!!!

உனக்கு 30 எனக்கு 93.....நிலவில் கால் பதித்த வீரரின் கோலாகலமான திருமணம்!!!!

நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான பஸ் ஆல்ட்ரின், அவரது 93 ஆவது வயதில் 30 வயது பெண்ணை  திருமணம் செய்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது. 

1969ல், அப்பல்லோ - 11 விண்கலம் வாயிலாக நிலவுக்கு பயணித்த போது நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் பயணித்து நிலவில் இரண்டாவது மனிதனாக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரரர் பஸ் ஆல்ட்ரின் ஆவார்.  இவருடன் பயணித்த மற்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா'வில் இருந்து 1971ல் ஓய்வு பெற்ற ஆல்ட்ரின், மூன்று பெண்களை திருமணம் செய்து, விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது அன்கா பார் என்ற 30 வயதுள்ள பெண்ணை நான்காவதாக திருமணம் செய்துள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அழிக்கப்பட்ட வயல்....ஆப்கானிஸ்தானில் தொடரும் அராஜகம்!!!