ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் உலக நாடுகள்...உக்ரைன் போர்நிறுத்தம் சாத்தியமா?!!

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் உலக நாடுகள்...உக்ரைன் போர்நிறுத்தம் சாத்தியமா?!!
Published on
Updated on
1 min read

அணு ஆயுதப் போரின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைன் பிரச்சினையில் பதற்றத்தைக் குறைக்க முயற்சிக்கின்றன. 

உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை:

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  உக்ரைன் போரில் பெரும் போர் வெடிக்கும் அபாயத்தைக் குறைப்பதே இதன் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார் ஜேக்.

இது தொடர்பாக சல்லிவன், புதினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் உடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

போருக்கு முடிவுகாணும் நோக்கத்தில்:

இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பார்க்கும் போது அணுசக்தி யுத்தத்தின் அதிகரித்த அச்சுறுத்தலுக்கு மத்தியில், இப்போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைன் பிரச்சினையில் பதட்டத்தை குறைக்க முயற்சிப்பதாகவே தெரிகிறது.

மேற்குலக நாடுகளில் தீவிரமடந்து வரும் எரிசக்தி நெருக்கடி மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த நீண்டகாலப் போருக்குத் தீர்வு காணும் முயற்சியில் தற்போது உலக நாடுகள் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com