திமுகவின் நடவடிக்கைகளை கவனித்தால், மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே சந்தேகமாக உள்ளது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் வாக்குறுதியில் கூறியதை மறந்து விட்டு தற்போது நிபந்தனை விதிக்கலாமா என கேள்வியெழுப்பினார். மேலும் திமுகவின் நடவடிக்கைகளை கவனித்தால், மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே சந்தேகமாக இருப்பதாக தெரிவித்தவர், மகளிர் உரிமை தொகை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிக்க : 'வானம் பார்த்த பூமி' மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!
தொடர்ந்து பேசிய அவர், ஊழல் குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுத சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை எனவும், முறைகேடுகளுக்கு பெயர்போன திமுகவினர் ஊழலை பற்றி பேசலாமா எனவும் கடுமையாக சாடினார்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த டிஐஜி விஜயகுமாரை காவல் பணியில் தொடர அனுமதித்தது ஏன்? என கேள்வியெழுப்பிய எடப்பாடி, தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் ஈபிஎஸ் வலியுறுத்தினார்.