”புத்திசாலித்தனத்துடன்.....வாழ்க்கையை....” பிரதமருக்கு அவரது அம்மா செய்த அறிவுரை!!!

”புத்திசாலித்தனத்துடன்.....வாழ்க்கையை....” பிரதமருக்கு அவரது அம்மா செய்த அறிவுரை!!!

பிரதமர் மோடி, அவரது சகோதரர்கள் மற்றும் பிற குடும்பத்தினர் முன்னிலையில் காந்திநகரில் உள்ள தகன மைதானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.  அவருக்கு பிரதமர் மோடி மற்றும் அவரது சகோதரர்கள் சோமாபாய், அம்ரித்பாய், பிரஹலாத்பாய் மற்றும் பங்கஜ்பாய் ஆகிய ஐந்து மகன்களும், வசந்திபென் என்ற மகளும் உள்ளனர்.

அம்மாவுக்கு அஞ்சலி:

ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில்  பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான வாட்நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்து கொண்டனர்.  ஹீராபென் அவரது 99வது வயதில் அகமதாபாத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.  அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாட்நகர் வணிகர்கள் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள் சந்தைப் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.

கலந்து கொண்டோர்:

வாட்நகரில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா ஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் குஜராத் சட்டசபை சபாநாயகர் சங்கர் சவுத்ரி, மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் படேல், எம்எல்ஏக்கள் பூர்ணேஷ் மோடி, ஜெதா பர்வாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  ஹீராபெனின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவர் சஞ்சய் ஜோஷி, முன்னாள் சபாநாயகர் நீமா ஆச்சார்யா, முன்னாள் எம்எல்ஏ மாயா கோட்னானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் நெகிழ்ச்சி:

தனது தாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”அந்த மகிமையான நூற்றாண்டு இறைவனின் காலடியில் தங்கியிருப்பதாக... அம்மாவிடம் மூன்று விதமான பயணத்தை உணர்ந்துள்ளேன்.  அதில் ஒன்று துறவியின் பயணம், மற்றொன்று தன்னலமற்ற கர்மயோகியின் பயணம் இறுதியாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் சின்னம்.  அவரது 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, ​​அவர் ஒரு விஷயத்தை கூறினார்.  அது எப்போதும் நினைவில் இருக்கும். ’புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள்.  வாழ்க்கையைத் தூய்மையுடன் வாழுங்கள்.’”என பேசியுள்ளார் பிரதமர் மோடி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  புத்தாண்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு....ஆப்கானிஸ்தானில் தொடரும் குண்டுவெடிப்பு...!!!