தரம் உயர்த்தப்படுமா..... அழுத்தம் கொடுக்கும் மின்சார துறை......

தரம் உயர்த்தப்படுமா..... அழுத்தம் கொடுக்கும் மின்சார துறை......

தயாரிப்பு தரம் மற்றும் செயல்திறன் குறித்து அரசாங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. உலகத் தரத்திற்கு இணையாக தொழில்துறையை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது.

இந்திய மின்சாரத் துறை வல்லுநர்கள், நாட்டின் மின்சாரத் தயாரிப்புகளை உலகத் தரத்திற்கு இணையாக கொண்டு வரச் செய்ய இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தயாரிப்பு தரம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் அரசாங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்று தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.  உலகத் தரத்திற்கு இணையாக தொழில்துறையை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது எனவும் மின் பாதுகாப்பு விதிமுறைகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.  மேலும் மோசமான தரம் மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தேசிய நெருப்பு பாதுகாப்பு சங்கத்தின் கூற்றுப்படி, ”மின் அதிர்ச்சிகள் மற்றும் பெரும்பாலான தீ விபத்துகள் உடைந்த மின் சாதனங்களால் ஏற்படுகின்றன.  தீ விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) தரநிலைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ” எனக் கூறியுள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மூன்று மாநிலங்களிலும் தேர்தல் எப்போது....இன்று அறிவிப்பு!!!