இலக்கிய பேராசான் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்கப்படுமா?!

இலக்கிய பேராசான் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்கப்படுமா?!

இலக்கிய பேராசான் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினா விடை நேரத்தில், இலக்கியப் பேராசான் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பேராசான் ஜீவானந்தம் "ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்" என்ற வகையில் தன்னுடைய போராட்டத்தை நடத்தியவர் என்றும், கலை, இலக்கிய முன்னெடுப்புகளில் பெரிதும் பங்காற்றியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.  மேலும், பேராசான் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:   ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளை சம்பவம்... தொடரும் விசாரணை!!