பாஜகவை எந்த வகையிலும் சந்திக்க போவதில்லை....கூறியது யார்? காரணம் என்ன?

பாஜகவை எந்த வகையிலும் சந்திக்க போவதில்லை....கூறியது யார்? காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

இந்திய ஒற்றுமை பயணத்தின் முடிவில் நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.  இந்தப் பயணம் முடிவடைவதற்கு முன்பே, காஷ்மீரில் ராகுல் காந்தியுடன் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைகோர்த்ததும், மகாராஷ்டிர அரசியலில் விவாதம் தொடங்கியுள்ளது.

கைகோர்த்த சிவசேனா:

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணத்தில் காஷ்மீரில் சிவசேனா மீண்டும் நுழைந்தது மகாராஷ்டிரா அரசியலில் சூடு ஏற்படுத்தியுள்ளது.  வரும் நாட்களில் நடைபெற உள்ள பிஎம்சி தேர்தலில் சிவசேனா வலுவாக இருப்பது மட்டுமல்லாமல், 2024 லோக்சபா தேர்தலில் சிவசேனாவுடன் இணைந்து வலுவான அரசியலுக்கான அடித்தளத்தையும் காங்கிரஸ் அமைத்து வருகிறது.  

எந்த வகையிலும்:

காங்கிரஸை சந்திப்பதன் மூலம் பாஜகவை எந்த வகையிலும் சந்திக்கப் போவதில்லை என்பதை நிரூபிக்கவே சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மறுபுறம், காங்கிரஸிடம் இருந்து கிடைத்த உறுதியுடன், மகாராஷ்டிராவில் பாஜகவை எதிர்த்து போட்டியிட சிவசேனா தயாராக உள்ளது எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் விவாதம்:

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.  இந்திய ஒற்றுமை பயனத்தின் முடிவில் நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.  இந்தப் பயணம் முடிவடைவதற்கு முன்பே, காஷ்மீரில் ராகுல் காந்தியுடன் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைகோர்த்ததும், மகாராஷ்டிர அரசியலில் விவாதம் தொடங்கியது. 

காரணம் என்ன?:

மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்ட மகாவிகாஸ் அகாடியுடன் தொடர்புடைய மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ”தற்போது சிவசேனாவுக்கு காங்கிரஸின் ஆதரவு மிகவும் முக்கியமானது.  சில பெரிய அரசியல் அமைப்புகளுடன் இணைந்தால்தான் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு வலுவான களம் உருவாகும் என்பதே இதற்கான காரணம்”என்று அவர் கூறியுள்ளார்.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com