தமிழ்நாடு தொழில்நுட்ப பூங்காவாக மாற்றப்படுமா...!

தமிழ்நாடு தொழில்நுட்ப பூங்காவாக மாற்றப்படுமா...!
Published on
Updated on
1 min read

சிறு குறு தொழில்களை பூங்காவாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அதற்கேற்றார் போல புதிய ரகப் பொருட்களை சிறுகுறு தொழில் செய்வோரும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

கண்காட்சி:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் சிட்பி வங்கி சார்பில் மகளிரிருக்கான சுயசார்பு கண்காட்சியை தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தொடங்கி வைத்தார்.  கைவினைப் பொருட்கள் மற்றும் குறுந்தொழில்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கண்காட்சி அமைந்திருக்கிறது.

கைவினைப் பொருள்கள்:

கண்காட்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து பல்வேறு தொழில் முனைவோர் கைவினையர்கள்  தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைத்துள்ளனர். இன்று முதல் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 46 அரங்குகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.  வீட்டில் இருந்தபடியே மகளிர் தயாரிக்கும் சிறிய ரக வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என கண்கவரும் பல்வேறு தரப்பினர் பயன்படுத்தும் வகையில் அரங்குகள் அமைந்துள்ளது.

வளரும் தொழில்நுட்பம்:

சிட்பி வங்கி மூலமாக சிறு, குறு தொழில் முனைவோர்கள் குறிப்பாக மகளிர்களுக்கு உதவும் வகையில் இந்த கண்காட்சி இன்று துவங்கப்பட்டிருக்கிறது.  தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த பொருட்களாக இருக்கக்கூடிய 38 மாவட்டங்களில் உள்ள பொருட்கள் ஒவ்வொரு அரங்கிலும் கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருக்கிறது.  சிறு குறு தொழில்களை பூங்காவாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம்.  தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அதற்கேற்றார் போல புதிய ரகப் பொருட்களை சிறுகுறு தொழில் செய்வோரும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com