வாக்களிக்கும் உரிமை சட்டத்தில் வயது குறைப்பு செய்கிறதா நியூசிலாந்து?!!

வாக்களிக்கும் உரிமை சட்டத்தில் வயது குறைப்பு செய்கிறதா நியூசிலாந்து?!!

நியூசிலாந்து:  வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைப்பது குறித்து சட்டம் இயற்றவுள்ளது நியூசிலாந்து.
Published on

நியூசிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18 இலிருந்து 16 ஆகக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.  மேலும் அது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார் ஜெசிந்தா.  

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

நியூசிலாந்து உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புக்குப் பிறகு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க நியூசிலாந்தின் பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கூறும் போது தற்போதைய 18 வயது பாரபட்சமானது என்றும் இளைஞர்களின் மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜெசிந்தா ஆர்டர்ன் கருத்து:

ஜெசிந்தா ஆர்டர்ன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வாக்களிக்கும் வயதைக் குறைப்பதை நான் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறேன், ஆனால் எனது அரசிடம் போதுமான எண்ணிக்கையில் ஆதரவு இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்குட்பட்டவர்கள்:

பிரேசில், ஆஸ்திரியா, கியூபா போன்ற சில நாடுகள் மட்டுமே தற்போது 18 வயதுக்குட்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்கின்றன. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com