அமெரிக்க அதிபராகிறாரா எலான் மஸ்க்?!!!

அமெரிக்க அதிபராகிறாரா எலான் மஸ்க்?!!!
Published on
Updated on
1 min read

உலகின் அனைத்து முக்கிய பங்குச் சந்தைகளும் பொருளாதார மையங்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு மாறும். 

ரஷ்யா உக்ரைன் போர், சீனாவில் கோவிட் ஆகியவற்றால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் பல்வேறு யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் 10 கணிப்புகளை கூறியுள்ளார்.   இது ட்விட்டரில் தற்போது மிகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.  ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமான மெத்வதேவ் ட்விட்டரில், “புத்தாண்டுக்கு முன்பு அனைவரும் கணிப்புகளை செய்கிறார்கள். பலர் ஆடம்பரமான மற்றும் அபத்தமான கருதுக்களை உருவாக்குகிறார்கள். 2023ல் என்ன நடக்கும் என்று நானும் சொல்கிறேன்?” எனக் கூறிஅவரது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”வரும் நாட்களில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஏற்படும்.  அது பல துண்டுகளாக உடைந்து விடும். மெக்சிகோவும் டெக்சாஸும் ஒன்றிணைந்து புதிய நாடு உருவாகும்.  மீதமுள்ள மாநிலங்களின் ஒன்றியத்தின் தலைவராக எலோன் மஸ்க் இருப்பார்.  இதனுடன், உலகின் அனைத்து முக்கிய பங்குச் சந்தைகளும் பொருளாதார மையங்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தவிர்த்து ஆசியாவில் குவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ”தற்போதைய உலகில், நிதி அமைப்பை இயக்கும் இரண்டு நிறுவனங்களான IMF மற்றும் உலக வங்கி ஆகியவை முடிவுக்கு வரும். டாலர் மற்றும் யூரோவின் ஏகபோகம் முடிவுக்கு வரும்.  உலகம் டிஜிட்டல் கரன்சியில் பரிவர்த்தனை செய்யும்.  இதனுடன், ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து, பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக மாறும்.  ஆனால் விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் முற்றிலும் சிதைந்துவிடும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com