ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை.... சீமான் ஆவேசம்!!!

ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை.... சீமான் ஆவேசம்!!!

இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டம்:

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன்,முருகன் உள்ளிட்ட நான்கு பேரை உடனடியாக சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யக்கோரி, சீமான் தலைமையில் திருச்சி ஜங்ஷன் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முகாம் தேவையில்லை:

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், சிறப்பு முகாம் தேவையில்லை என்பதுதான் தங்கள் நிலைப்பாடு எனவும் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகனை மீண்டும் கொடுஞ்சிறையில்  அடைத்து வதைப்பது சரியல்ல என ஆவேசமாக பேசினார்.
மேலும் திபத்தியர்களுக்கு  குடியுரிமை கொடுத்திருக்கும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு கொடுக்க மறுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்  இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அதனால் இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க:  மோடி குறித்து அவதூறு பேச்சு... பதவியை இழக்கிறாரா ராகுல்?!!