
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதறுவது ஏன் என்று முரசொலி நாளிதழ் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி நாளேட்டில் வெளியாகி உள்ள தலையங்க கட்டுரையில், கோடநாடு என்று சொன்னாலே கொல நடுக்கம் பழனிசாமிக்கு ஏற்படுகிறது என விமர்சித்துள்ள முரசொலி நாளிதழ், எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்ல தயார் என்று என்றாவது சி.பி.சி.ஐ.டி வாசலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தால் அவரை நம்பலாம். ஆனால் அவரது பதற்றமே அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.
ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது என்று சொல்ல எடப்பாடி பழனிசாமி யார்? என்று கேள்வியெழுப்பிய முரசொலி நாளிதழ், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிமையும், கடமையும் உண்டு என குறிப்பிட்டுள்ளது. மேலும், கோடநாடு வழக்கில் அனைத்தும் சட்டப்படி விரைவில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.