பாலியல் புகாரில் சிக்கிய குருஜி! யார் இந்த சிவசங்கர் பாபா!?

சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி நிர்வாக இயக்குநரும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். யார் இந்த சிவசங்கர் பாபா என்பதை பார்ப்போம்.  

பாலியல் புகாரில் சிக்கிய குருஜி! யார் இந்த சிவசங்கர் பாபா!?

சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி நிர்வாக இயக்குநரும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். யார் இந்த சிவசங்கர் பாபா என்பதை பார்ப்போம்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயத்தை சேர்ந்த பிரபல புரோகிதரான ஷர்மா ஐயரின் மகன் தான் சிவசங்கரன். 30 வருடங்களுக்கு முன் வேலை தேடி சென்னை வந்த நிலையில் அங்கு, மண்ணடி, மலையப்பன் தெருவில் லாரி ஷெட்டில் வேலை பார்த்த அவர் காவி உடை அணிந்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தார்.

 பின்னர் சிவசங்கர் பாபா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு ஆன்மிக செற்பொழிவுகளை செய்துவந்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யாகவா முனிவருடன் நடந்த விவாதத்தில் சண்டையிட்ட வீடியோ ஒன்று வைரலானது. இந்த நிகழ்வு திரைப்பட காமெடியாகவும் வெளிவந்தது. பிறகு சில தனியார் தொலைக்காட்சிகளில் ஆன்மிக செற்பொழிவின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து அரசியல் தொடர்புகள் மூலம் தன் செல்வாக்கை உயர்த்திக்கொண்ட சிவசங்கர் பாபா, பெசன்ட் நகரிலும், நீலாங்கரையில் தனது ஆன்மிகப் பணியை தொடர்ந்தார். அதன்பின் கேளம்பாக்கத்தில் சுமார் 64 ஏக்கரில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை தொடங்கினார்.

கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் கேம்பஸ் பெயர் ராமராஜியம். மேலும் மகாஜோதி காலனி, கல்கி கார்டன், பழனி கார்டன் மூன்று பகுதியிலும் பக்தர்கள் பெயரில் முன்னூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாணவ, மாணவியர்களுக்கென தனி ஹாஸ்டல் வசதியும் உள்ளது.

இப்படி பல வித்தகளை சொல்லி பள்ளி மாணவிகளை ஏமாற்றி அவர்களிடம் சில்மிஷத்தை காட்டிய சாமியார் சிவசங்கர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.