பாலியல் தொழிலாளர்களை மட்டும் கொலை செய்த தொடர் கொலையாளி!!!!காரணம் என்ன?

பாலியல் தொழிலாளர்களை மட்டும் கொலை செய்த தொடர் கொலையாளி!!!!காரணம் என்ன?
Published on
Updated on
2 min read

1888 நவம்பர் மாதம் காலை வேளையில் ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் கண்ட காட்சி அவர் இதயத்தையே பதைபதைக்க வைத்தது.  ஒரு சில நிமிடங்களுக்கு அவரால் எதையும் யோசிக்க முடியவில்லை.  சில கண நேரங்களுக்கு பிறகு சுய நினைவு வந்தவராய் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து காண்பித்தார்.  

போலீஸ் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.  அது லண்டனின் வைட்சேப்பல் சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த ஒரு தெரு. அந்த தெருவில் ஐந்து பெண்களின் சடலங்கள் நிர்வாணமான நிலையில் இருந்தன.  அவர்கள் ஒவ்வொருவருக்குமான இடைவெளி ஒரு மைல் தூரமாக இருந்தது.

அனைத்து காவல் நிலையங்களுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டது.  எந்த காவல் நிலையத்திலும் குறிப்பிட்ட தேதியில் காணவில்லை என்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை.  இது போலீஸாரைக் குழப்பமடைய செய்தது.  விசாரணையில் எந்த பக்கம் சென்றாலும் முடக்கமாகவே இருந்தது.  ஒரு நபர் தயங்கிய படியே போலீஸுக்கு துப்பு கொடுத்தான் அவன் பெயர் வெளிவர கூடாது என்ற நிபந்தனையுடன்.  

அப்போது தான் அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் என்பது தெரிய வந்தது.   தடவியல் ஆய்வு குழுவினர் அறிக்கையின் படி, கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரின் தொண்டையும் இடமிருந்து வலமாக வெட்டப்பட்டு இருந்ததால் கொலைக்காரன் இடக் கைப்பழக்கம் உள்ளவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.  தொண்டை கச்சிதமாக வெட்டப்படிருந்தது.  இதனால் கொலைக்காரன் கறிக்கடையில் வேலை செய்பவனாக இருக்க வேண்டும் இல்லையெனில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வேண்டும் என தடவியல் வல்லுநர்கள் கூறினர்.

கொலை நடந்து ஒரு சில வாரங்களில் மீண்டும் இதே போன்ற கொலை நடைபெற்றது.  அப்படியே இல்லை என்றாலும் ஒரு சில ஒற்றுமை அதில் இருக்கவே செய்தது. இந்த கொலைக்கு பிறகு போலீஸாரின் விசாரணை சற்று துரிதப்படுத்தப்பட்டது.  பத்திரிக்கைகளால் இந்த கொலைக்காரன் ’ஜேக் தி ரிப்பர்’ என அழைக்கப்பட்டான்.  தடயம் எதுவும் கிடைக்காததால் ஜேக்கை போலீஸால் இறுதி வரை கண்டறிய முடியவில்லை.  

அதன் பிறகு கொலை எதுவும் நடக்காததால் போலீஸும் இந்த வழக்கை கிடப்பில் போட்டனர்.  ஜேக் இறந்து விட்டனா?  அவன் கொலை செய்ததற்கான காரணங்கள் என்ன? பாலியல் தொழில் செய்பவர்களை மட்டும் கொன்றதற்கான காரணம் என்ன? இதுபோன்ற பல கேள்விகள் ஜேக் தி ரிப்பர் வழக்கில் அவிழ்க்கப்படாததாகவும் அவிழ்க்க முடியாததாகவும் மாறி தீர்க்கப்படாத வழக்குகளின் பட்டியலில் இணைந்து விட்டது.  சிறு தடயம் கூட இல்லாமல் எவ்வாறு அந்த காலகட்டத்தில் இத்தனை பேரை கொலை செய்ய முடிந்தது என்ற கேள்வியும் மக்கள் மனதில் இன்று வரை தீராத மர்மமாகவே உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com