புதுக்கோட்டையில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமநாதன் தலைமை வகித்தார். சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். மேலும், கழக அமைப்புச் செயலாளரும் புதுக்கோட்டை மாவட்ட வடக்கு கழகச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர் ஆகோயோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி.....
மேலும், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, தலைமைக்காக பேச்சாளர் நெத்தியடி நாகையன், அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற இனச் செயலாளர் நல்லசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, "வருகின்ற பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி எடப்பாடியாரை முதலமைச்சர் ஆக்குவதற்கு இப்பொழுதே நாம் பாடுபட வேண்டும், அதற்கு நாம் இப்பொழுதே வேலையை தொடங்க வேண்டும்", எனக்கு கூறினார்.
தகுதியுள்ள பெண்கள் யார்?... தகுதி இல்லாத பெண்கள் யார்?.....
அதோடு அவர், "திமுக அரசு மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார்கள் இப்பொழுது தகுதியின் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் தருவோம் என கூறியுள்ளனர் அப்பொழுது தகுதியுள்ள பெண்கள் யார் தகுதி இல்லாத பெண்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும்", எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், கழக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி சாதாரண வார்டு மெம்பர் ஆகி, பின்னர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்து முன்னேறி வந்தவர் எனவும், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலாக மாற்றி, வயலில் இறங்கி அவரும் பெண்களுடன் சேர்ந்து நாத்து நட்டார் எனவும் பேசினார். பின்னர் பேசிய நெத்தியடி நாகையன் திமுக அரசின் பல்வேறு ஊழல்களை எடுத்துரைத்தார். குறிப்பாக காவேரி குண்டார் இணைப்பு திட்டத்தினை எடப்பாடிஆட்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கையின் பேரில் திட்டத்தை கொண்டு வந்தார்கள் என்றும், இப்பொழுது அத்திட்டம் செயல்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும், இக்கூட்டத்தில் அதிமுக ஒன்றிய வட்டக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர், நகர கழக தெற்கு பகுதி செயலாளர் அப்துல் ரகுமான், நகர கழக வழக்கப் பொதுச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சி.வி.பி. அறக்கட்டளை சார்பில் இரத்தக் கொடையாளர்கள் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது அதனை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
முன்னதாக புவனகிரி அழகு செந்தாமரை குழுவினர் வெற்றி நமதே என்ற கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதாவின் கொள்கை பாடல்களுக்கு நடனம் ஆடினர் குறிப்பாக புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போன்று வேடமிட்டவர் மேடையில் தோன்றிய காட்சி அனைவரையும் மெய்சிலிக்க செய்தது.