வீட்டில் அனைவரும் கடவுள் பக்தியற்றவர்களாக இருக்க முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி மட்டும் அனைத்து கோயில்களுக்கும் சென்று வருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்னர் கூட கீழ்ப்பாவூர் நரசிம்மர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றினார் துர்கா ஸ்டாலின்.
நடந்தது என்ன?:
இன்று துர்கா ஸ்டாலின் திருவாரூர் பெருமாள் கோயிலை சென்றடைந்த போது மழை பெய்து கொண்டிருந்ததால் அவருடன் வந்தவர்கள் கருப்பு நிற குடையை பிடித்தவாறு அவரை பின்தொடர்ந்துள்ளனர். அப்போது சாமியின் சிலையும் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. சாமியின் சிலைக்கு எப்போதும் பயன்படுத்தும் குடை பயன்படுத்தப்படாமல் கருப்பு நிற குடை பயன்படுத்தப்பட்டதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதற்கான காரணம் என்ன என பார்த்தப்போது பின்னால் வந்து கொண்டிருந்த துர்கா ஸ்டாலினுக்கு சாமியின் குடை பிடிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட மாடல்:
இதனால அதிருப்தியடைந்த ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பெருமாளுக்கு நேர்ந்த கொடுமை என தலைப்பிட்டு பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
”பெருமாளுக்கு பிடிக்க வேண்டிய குடையை துர்கா ஸ்டாலின் அவர்களுக்கும் துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்க வேண்டிய கருப்பு குடையை பெருமாளுக்கு பிடிக்கும் கொடூரம் இதுதான் திராவிட மாடல்.” என பதிவிட்டுள்ளார் அந்த ட்விட்டர் பயனாளர்.
விரைவில்..:
இதை டேக் செய்த மற்றுமொரு பயனாளர் “குடை தானம் கொடுக்க வேண்டிய தருணத்தை ஆதி நாராயணன் விரைவில் வரவைப்பான்” எனப் பதிவிட்டுள்ளார்.
சாமானியனாக இருந்திருந்தால்..:
மற்றொரு பயனாளர் துர்கா ஸ்டாலினுக்கு ஆதரவாகா பேசியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ”பல பேர் பயங்கரமா முட்டு குடுக்குறீங்க. அது கல்லு ஆனா அவங்க மனுசங்க தானே அதனால் குடை பிடிக்கிறது தவறில்லைனு சொல்றீங்களே!. ஏன்? நாம் சென்றாலோ அல்லது நமது வீட்டில் உள்ள பெண்கள் சென்றாலோ அப்போதும் இது போன்று குடைபிடிப்பார்களா.? முடியாது ஏனென்றால் நாம் சாமானியர்கள் அவர் முதலமைச்சரின் மனைவி” என பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் திமுகவும் முதலமைச்சரும் துர்கா ஸ்டாலினும் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ”இந்தியாவிற்கும் இடமளிக்கலாமே...” ஆதரவளிக்கும் ரஷ்யா...எங்கே??