குரங்கம்மையின் பெயரை WHO மாற்ற காரணம் என்ன...!

குரங்கம்மையின் பெயரை WHO மாற்ற காரணம் என்ன...!

Published on

பைடன் நிர்வாக அதிகாரிகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால் WHO இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.  அமெரிக்க அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் உலக சுகாதார நிறுவனத்திடம் பெயரை  மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 

குரங்கம்மை:

குரங்கம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிக அரிதான ஒன்று.  

அமெரிக்காவின் அழுத்தம்:

அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ், உலக சுகாதார நிறுவனம்  குரங்கு அம்மை என்ற பெயரை MPOX என மாற்றப் போகிறது.  இது அமெரிக்க நாளிதழ் ஒன்றில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சலால் ஏற்படும் அச்சத்துக்கு முடிவு கட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெயர்மாற்றம் காரணம்:

குரங்கு அம்மை வைரஸ் என்ற பெயர் நோயின் தாக்கத்தை வேறுவிதமாக மாற்றுகிறது என்று கவலை கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.  இதன் காரணமாக, நாட்டில் தடுப்பூசி பாதிக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com