என்ன ஆனது ஜந்தர் மந்தர் விவசாயிகள் போராட்டம்.....!!!!

என்ன ஆனது ஜந்தர் மந்தர் விவசாயிகள் போராட்டம்.....!!!!

மஹாபஞ்சாயத் போராட்டம்:

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதால் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.  அதனால் தற்போது டெல்லியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தை தடுக்கும் நோக்கில் விவசாயிகள் தலைவர் ராகேஷ் டிகைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.  ராகேஷ் தான் டெல்லியில் நுழைய மாட்டேன் என உறுதி அளித்தபின் விடுதலை செய்யப்பட்டார்.

அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு:

போராட்டம் அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் டெல்லி மற்றும் ஹரியானா இடையேயான சிங்கு எல்லை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  டெல்லி-ஹரியானா, டெல்லி-உத்திரபிரதேசம் மாநிலங்களை இணைக்கும் சாலைகளில் காவலர்கள் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ல்க்கிம் கேரி பகுதியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவையும் எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.  இந்நிலையில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா போராட்டம் செய்யபோவதாக அறிவித்தது.  அதற்கு காரணமாக வேலைவாய்ப்பின்மையை கூறியுள்ளது.

இறுதி மூச்சு உள்ளவரை...:

போராட்டததை தடுத்து நிறுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதற்கு பதிலளிக்கும் வகையில் தடுப்பு காவலால் போராட்டத்தை ஒருபோதும் ஒடுக்க முடியாது எனவும் இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் எனவும் ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி ஒதுங்கிவிட மாட்டோம் எனவும் விவசாய தலைவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: பாஜகவிடமிருந்து சிசோடியாவுக்கு வந்த அழைப்பு....!!!