நலனே முக்கியம்...ராகுல் காந்திக்கு பாஜக மத்திய அமைச்சர் எழுதிய கடிதம்...

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பொது அவசரநிலை என்பதால், இந்திய ஒற்றுமை பயணத்தை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்படலாம். 
நலனே முக்கியம்...ராகுல் காந்திக்கு பாஜக மத்திய அமைச்சர் எழுதிய கடிதம்...
Published on
Updated on
1 min read

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. புதிய நோய் தொற்றுகளை கண்காணிக்கவும், நோயின் தீவிரத்தை கண்டறியவும் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

மன்சுக் எழுதிய கடிதம்:

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.  இதில், இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நெறிமுறையைப் பின்பற்றுமாறு இரு தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  இதனுடன், இது சாத்தியமில்லை என்றால், நாட்டின் நலன் கருதி நடைபயணத்தை ஒத்திவைக்க முடிவு எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அவசரநிலை என்பதால்...:

 "கொரோனா வைரஸ் தொற்றுநோய் பொது அவசரநிலை என்பதால், இந்திய ஒற்றுமை பயணத்தை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்படலாம்" என்று மத்திய சுகாதார அமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அவர், "ராஜஸ்தானில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் முகமூடிகள் மற்றும் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அதனுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே இந்த நடைபாதையில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்எனவும் கூறியுள்ளார்.

நலனே முக்கியம்:

அதே கடிதத்தில், மாண்டவியா மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் நெறிமுறையைப் பின்பற்ற முடியாவிட்டால், பொது சுகாதார அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டைக் காப்பாற்ற நாட்டின் நலன் கருதி இந்திய ஒற்றுமை பயணத்தை ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறதுஎனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com