“ஆளுநரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்” - பாஜக உயர்நிலைக்குழு அறிவிப்பு

“ஆளுநரை சந்தித்து  அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்”  - பாஜக உயர்நிலைக்குழு அறிவிப்பு
Published on
Updated on
1 min read

தமிழக ஆளுநரை சந்தித்து பாஜகவினர் திமுக அரசால் பாதிக்கப்பட்டது குறித்து  அறிக்கையை கொடுக்க  நேரம் கேட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்த நால்வர் குழு சென்னை விமான நிலையத்தில் பேட்டி

தமிழகத்தில் பாஜகவினர் மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  நால்வர் குழுவை அமைத்தார். இதில் பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சதானந்தா கவுடா, புரந்தேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றனர் இந்த குழுவானது இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா கூறியதாவது:-

சென்னை தற்போது மேற்கு வங்காளம் மற்றும் கேரளா போல் மாறி வருவதாக சதானந்த கவுடா குற்றம் சாட்டினார்.  தமிழகத்தில் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிக மோசமான நிலையை நோக்கி சென்றுள்ளது. அதனால் எங்களுடைய தலைமை அறிவித்தபடி பாதிக்கப்பட்டவர்களிடம் மிக ஆழமாக விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை எங்களது தொண்டர்கள் எந்த ஒரு பாதிப்புக்கும் உள்ளாக கூடாது என்பதற்காக இதை தேசிய அளவில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதுபோல அரசியல் தாக்குதல் மற்றும் அரசியல் காழ்புணர்ச்சி மூலம் பழிவாங்குதலை ஒருபோதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இன்று 30-40 பாதிக்கபட்ட பாஜக தொண்டர்கள் நிர்வாகிகளை சந்திக்க உள்ளோம், அவர்களிடம் திரட்டப்பட்ட தகவல்களையும் நாளை பாஜக நிர்வாகிகளின் இல்லத்தில் சென்று அவர்களிடம் தரப்படும் தகவல்களையும்,.. பின்னர் அதன் மூலம் ஒரு கோரிக்கை மனுவை தயாரித்து ஆளுநரிடம் வழங்க திட்டமிட்டு உள்ளோம் அதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. எங்களுடைய தேசிய தலைமைக்கு நாங்கள் மேற்கொள்ளும் விசாரணை அறிக்கையை இரண்டிலிருந்து மூன்று நாட்களில் கொடுக்க உள்ளோம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com