தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வி துறை...!

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வி துறை...!

Published on

விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தனியார் பள்ளி ஆசியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக பள்ளிக்கல்விதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் எனவும், தவறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது எனவும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு நாளைக்குள் நியமன ஆணைகளை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com